செவ்வாய், 19 ஏப்ரல், 2011

Election commision :அழகிரி மீண்டும் குற்றச்சாட்டு

சென்னை : ""சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக தான் செயல்பட்டது,'' என, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை வந்த மத்திய அமைச்சர் அழகிரி விமான நிலையத்தில் கூறுகையில், "நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மீண்டும் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்பார். மதுரை மேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்தினால், அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக தான் செயல்பட்டது. அ.தி.மு.க., தொண்டர்கள் பரவலாக தாக்கப்பட்டு வருவதாக ஜெயலலிதா கூறுகிறார். தென்மாவட்டங்களில் தி.மு.க., தொண்டர்கள் தான் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர்.நீங்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தால் தான், எந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியும்' என்றார்.
SASTHANAND s - madurai,இந்தியா
2011-04-19 07:18:45 IST Report Abuse
குமுறல் பேச்சு. பண பட்டுவாடா பண்ண முடியலன்னு ....சகயாமும் பிரவின்குமாரும் வச்ச ஆப்பு இன்னும் வேலை செய்யுது போல .......என்ன ஆட்டம் டா சாமி ..........மதுரைய சாக்கடையாக்கிய பெருமை உங்கள சாரும்

ஆரூர் ரங - chennai,இந்தியா
2011-04-19 06:19:43 IST Report Abuse
உங்களால் அதிகமாக தாக்கப்பட்டு ICU வில் இருப்பது தமிழகமே! இத்தனை கொடுமைகளை அனுபவிக்க தமிழகம் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தது?

Shivling - Boston,யூ.எஸ்.ஏ
2011-04-19 05:50:25 IST Report Abuse
மக்கள் பண்ணதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ...என்ன உரிமை ? மே மதத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ன செய்ய முடியும் தேர்தல் கமிசனால் ?

Chandran - Tamil Nadu,இந்தியா
2011-04-19 05:21:14 IST Report Abuse
===>"தென்மாவட்டங்களில் தி.மு.க., தொண்டர்கள் தான் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர்"<=== ஒரு வேளை தாக்கப்பட்டவங்க ஸ்டாலின் கோஷ்டியாக இருந்தால் உங்க கோஷ்டி ஆள்களாலும், உங்க கோஷ்டியா இருந்தா ஸ்டாலின் கோஷ்டி ஆள்களாலும் தாக்கப்பட்டிருக்கலாம்.

2011-04-19 05:09:06 IST Report Abuse
உங்க குடும்பத்தோட களவானித்தனம் உலகத்துக்கே தெரியும். இன்னும் என்ன நடிப்பு? உனக்கு என்ன நடிப்பு. சக்கரவர்தின்னு பட்டமா கொடுக்க போறாங்க? முன்ஜாமீன் வாங்குறதுக்கு உண்டான வேலையை பாரு போ.................

Tamilselvan - Chennai,இந்தியா
2011-04-19 05:02:16 IST Report Abuse
மன்மோகன் சிங்க் போன்ற பொருளாதார வல்லுனர்கள் இருக்கும் மத்திய அரசில்,இந்த ஆளும் ஒரு காபினெட் அமைச்சர். அது ஒவ்வொரு தமிழருக்கும் ஏற்பட்டுள்ள அவமானம்.

கருத்துகள் இல்லை: