இருவேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் திருடர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய்ப் பொலிஸ் எல்லைக்குட்பட்ட வீடொன்றில் அதிகாலை ஒரு மணியளவில் வீட்டு யன்னலை உடைத்து உள்நுழைந்த திருடன் ஒருவன்; தங்கநகைகளை திருடியவேளையில் கோப்பாய்ப் பொலிஸாருக்கு வீட்டுக்காரர் உடனடியாக தகவல் வழங்கியதையடுத்து குறித்த திருடன் கைதுசெய்யப்பட்டான். மேற்படி சந்தேக நபர் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, சங்கானையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவமொன்றில் திருடனின் குடும்பத்தவரை பொலிஸார் கைதுசெய்தனர். கடந்த வாரம் வர்த்தகர் ஒருவர் தனது வர்த்தக நிலையத்தைப் பூட்டிவிட்டு ஆலயத்திற்குச் சென்றிருந்தவேளையில், வர்த்தக நிலையத்திலிருந்த நாலரை இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. மேற்படி வர்த்தக நிலையத்தில் திருட்டு இடம்பெற்று 3 நாட்களின் பின்னர் சந்தேக நபர் மோட்டார் சைக்கிள், றேடியோ செற் மற்றும் நகைகளைக் கொள்வனவு செய்துள்ளார். இதனை அவதானித்த வர்த்தகர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த சந்தேக நபருடன் அவரது மனைவி, பிள்ளைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக