.newathirady.com : இன்று ஜேர்மன் நாடு எங்களுக்கு சொந்தம்.. ஆனால் நாளை இந்த முழு
;உலகமே எங்களுக்குச் சொந்தம். என்ற ஜேர்மன் மொழி பாடல் நாசிக் கவிஞர்களால் இயற்றப்பட்டு பிரபல பாடகர்களை வைத்து பாட வைத்து ஹிட்லரின் பிரச்சார இயந்திரம் அதை ஒலி பரப்பியதைக் கேட்ட அன்றைய ஜேர்மன் நாட்டு மக்களின் முகங்கள் பிரகாசமடைந்தன.. தங்களைப் பற்றிய மிதமிஞ்சிய எண்ணமும் பெருமிதமும் அவர்கள் முகங்களில் தாண்டவமாடியது..
(ஆனால் இன்று இந்தப் பாடலை கேட்டால் இடியோசை கேட்ட நாகம்போல் அஞ்சிக் கலங்கி வெறுப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள் அவர்கள்..காரணம்.. அந்த அளவுக்கு அவர்கள் இறந்த காலமொன்றை பாதித்து..சிதைத்து.. அவர்களை பொய்யான ஒரு மாய உலகத்தில் சஞ்சரிக்கச் செய்து.. அவர்களை சர்வ தேசமே வெறுக்கும்படியாக அவர்கள் சிந்தனைகள் மழுங்கிப் போயிருந்தமைக்கு இப்படிப்பட்ட பாடல்களும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.. ஆகவேதான் இன்று இப்படிப்பட்ட நாசிக்களின் பாடல்களை ஜேர்மன் நாட்டில் தடை செய்திருக்கிறார்கள் என்பது வேறு விசயம்)
"ப்யூறர்" (Fuhrer) ... ஆம் அதுதான் ஹிட்லர் தனக்குத்தானே சூட்டிக் கொண்ட பெயர்..
இதன் அர்த்தம் வழி காட்டும் "மேதகு தலைவர்”.. உலகின் எந்த நாட்டின் தலைவருமே தங்களுக்கு சூட்டிக் கொள்ளாத வினோதமான பெயர் அது...
நாசிக் கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராக 1919ல் தனது ஆரம்பகால கால அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஹிட்லர் அந்தக் கட்சியிலிருந்து படிப்படியாக முன்னேறி 1921ல் அதன் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து பின் தனது கட்சியிலிருந்த பல அரசியல் தலைவர்களின் காலை வாரி விட்டு.. அவரால் உருவாக்கப்பட்ட பிரவுன் சேட் (Brown shirt) என்ற அண்டர் கிரவுண்ட் குண்டர்களின் துணையுடன் இரகசியமாக தனது எதிரிகளையும் எதிர்கட்சியின் சில தலைவர்களையும் போட்டுத் தள்ளிய அவர் ஜேர்மனியில் நடந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி 1933ல் ஜேர்மன் தலைமைப் பதவியான கன்சிலர் பதவியை கைப்பற்றி தனக்குத்தானே சூட்டிக் கொண்ட பெயர்தான் "ப்யூறர்"... சிறியோர் முதல் பெரியோர்வரை தனக்கு அடிமைகளாக வாழ வைப்பதற்காக தனக்குத்தானே சூட்டிக் கொண்ட அந்தப் பெயர்தான் "ப்யூறர்".. அதாவது "மேதகு தலைவர்”..
ஹிட்லருக்குள் மறைந்திருந்த மனித நேயமற்ற சிந்தனைகள் அத்தனையுமே.. இன வெறி.. கொலை வெறி.. யுத்த வெறி.. என்ற பாதையிலேயே பயணித்தது.. அதைத் தணித்துக் கொள்வதற்காக அவர் பல வழி வகைகளைக் கையாண்டார்.. ஆனால் அதை அவர் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் தன் இனத்தை நேசிக்கும் ஒரு மனிதனாக.. அதற்காக எதையுமே தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒரு தியாகியாகவே தன்னை மக்களுக்குக் காட்டிக் கொண்டார்.. இந்த முகமூடிக்குப் பின்னால் மறைந்திருந்த அந்த கோர முகத்தின் சிந்தனைகளை அவரின் மறைவிற்குப் பின்னர்தான் அந்த ஜேர்மன் நாட்டு மக்கள் அறிந்து கொண்டனர்...
(என்னைப் போன்று தனது தேசத்தை நேசிக்கும் ஒரு தேசியத் தலைவன் என்பவன் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னைத்தானே தியாகம் செய்து.. நாட்டுக்காக.. நாட்டு மக்களுக்காக.. தன்னை அர்ப்பணிப்பான் என்ற ஹிட்லரின் மேடைப் பேச்சைச் கேட்டு மயங்கிப் போனார்கள் அன்றைய ஜேர்மன் நாட்டு இளம் பெண்கள்.. தினமும் ஆயிரக் கணக்கான பெண்கள் அந்த தியாக உள்ளம்(?) படைத்த ஹிட்லருக்கு கடிதங்கள் எழுதினார்கள்.. திறந்த மோட்டார் வாகனத்தில் ஹிட்லர் கம்பீரமாக பவனி வரும்போதெல்லாம் அவரை ஒரு முறையாவது தொட்டுப் பார்த்துவிடத் துடித்தார்கள் அவர்கள்.. அந்த அளவுக்கு மக்களை மயக்கி அவர்கள் மனதில் கில்லாடித் தனமாக இடம் பிடித்திருந்த ஹிட்லர்.. பல வருடங்களாக ஈவா பிரவுன் (Eva Braun) என்ற இளம் பெண்ணை தனது உல்லாச மாளிகையில் ரகசியக் காதலியாக வைத்திருந்ததை அவருக்கு மிகவும் நெருங்கிய இராணுவ அதிகாரிகள் தவிர வேறு எவரும் அறிந்திருக்கவில்லை.. இறுதியாக தனது முடிவு நெருங்கி விட்ட நிலையில் ஈவா பிரவுணை தான் பதுங்கியிருந்த பங்கருக்குள் வைத்து திருமணம் செய்து தனது மனைவியாக்கிக் கொண்டார் என்பது வேறு விசயம்)
"அடொல்வ் ஹிட்லர் இங்கே எங்கள் இரட்சகர்.. இந்த பரந்த உலகில் அவர்தான் மேன்மை தங்கியவர்..அவருக்காகவே நாங்கள் வாழ்கிறோம்.. அவருக்காகவே நாங்கள் மரணமடைவோம்.. ஒரு தைரியமுள்ள பரம்பரையை ஆளும் அவர்தான் எங்கள் இறைவன்.."
இப்படிப் பாடியவர்கள் யாரென்று கேட்கிறீர்களா.. ஆம் அவர்கள் வேறு யாருமல்ல ஒரு பத்து வயதுகூட நிரம்பாத பச்சை மண்கள்.. பாடசாலையில் பாடங்கள் ஆரம்பமாகும் முன் எதிரே கரும் பலகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த பாடலை ஆசிரியர் தொட்டுக் காட்ட அவர்கள் உரத்த குரலில் தங்கள் கைகளை நேராக உயர்த்தி ஹிட்லர் அறிமுகப்படுத்திய அந்த சல்யூட்டுடன் ஜோராகப் பாடுவதுதான் அந்தக் குழந்தைகளின் காலைப் பிரார்த்தனையாக அன்றைய காலகட்டத்தில் இருந்தது.. எத்தனை கொடுமை இது என்று அன்றைய ஜேர்மன் மக்கள் சற்றேனும் சிந்தித்துப் பார்க்கவில்லை.. செஞ்சோலை சிறுவர்களுக்கு நிகழ்ந்தது போலவே ஒரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் உள்ள இடைவெளி என்னவென்றே தெரியாத அந்த வாழும் வழரும் பிஞ்சுகளின் மனங்களின் ஹிட்லருக்காக அவர்களை வாழ வைப்பதற்காக அவர்களை அந்த வயதிலேயே மூளைச் சலவை செய்ய திட்டமிட்ட ஹிட்லரின் நாசிக் கூட்டம் புரிந்த கொடுமை அது.... அந்த நாட்களில் ஹிட்லரின் பிரச்சாரப் பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு தற்போது வீடியோப் பதிவாக வெளி வந்திருக்கும் இந்தக் காட்சி இதற்கு ஆதாரமாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
for the details:
http://www.newathirady.com/2010/09/59.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக