நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்தஜோதி (18), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஜோதி தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். நேற்று காலையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் படித்த சக மாணவர்கள் ராக்கிங் செய்து வந்தனர். இதனால் மனவேதனை அடைந்து ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தனது அண்ணன் தீபக்கிடம் மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் இனி நான் சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.
இது தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜோதியிடம் ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் நாளை சென்னை வருகிறார்கள்.
முதலில் ஜோதியின் நெருங்கிய தோழிகளிடம் விசாரணை நடத்தும் போலீசார், ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் யார்- யார் என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கிறார்கள்.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்து பேசவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராக்கிங் மாணவர்கள் யார் என்பது தெரிய வந்ததும் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக