சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் நான் பேரம் பேசப் போவதில்லை.
அதே நேரத்தல் அவர்களாகவே முன்வந்து கூட்டணி அமைத்தால் நானும் தயார். ஜனதா கட்சிக்கு யார் 5 சீட் தந்தாலும் வழங்கினாலும் அவர்களுடன் கூட்டணி சேரத் தயார் என்றார்.
ராசா மீது வழக்கு-சுப்ரீம் கோர்ட்டை நாடும் சாமி:
முன்னதாக டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசாவுக்கு எதிராக வழக்குத் தொடர பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளேன்.
இந்த விவகாரம் தொடர்பாக ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு இரண்டு ஆண்டுகளாக பதில் வரவில்லை என்றார்.
பதிவு செய்தது: 05 Sep 2010 3:51 am
நீ தயார்தான் ஆனா யாரு உங்கூட கூட்டு வைப்பாக ராசா! எதுக்கும் கீழ்ப்பாக்கம் பக்கம் போய் பாரு
பதிவு செய்தது: 05 Sep 2010 2:09 am
ஸ்ரீ லங்காவில் மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்தா கண்டிப்பா 5 தொகுதி தருவார்
பதிவு செய்தது: 04 Sep 2010 9:59 pm
இல்லை ...இல்லை அவர் தான் ஐந்து தொகுதியிலும் போட்டி இடுகிறார் இதுதான் உண்மை இதை வேண்டுமானால் சுனா மானா சுவாமி இடமே கேட்டு பாருங்கோ
பதிவு செய்தது: 04 Sep 2010 9:53 pm
இல்லை ...இல்லை அவர் தான் ஐந்து தொகுதியிலும் போட்டி இடுகிறார் இதுதான் உண்மை இதை வேண்டுமானால் சுனா மானா சுவாமி இடமே கேட்டு பாருங்கோ