Montreal கனடாவில் பிரபலமான கனடாவில் பிரபலமான ஈழத் தமிழ் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மான்ட்ரீல் நகரில் வசித்து வந்தவர் சுந்தரம் யோகராஜா. 64 வயதான இவர் பிரபலமான தொழிலதிபர் ஆவார். தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு படைத்தவராக திகழ்ந்தவர். இவருக்குச் சொந்தமான ரெஸ்டாரென்ட் மான்ட்ரீல் நகரில் உள்ளது. தனது ஹோட்டலுக்கு வெளியே இவர் கடந்த புதன்கிழமையன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ரெஸ்டாரென்ட்டுக்கு அருகில் உள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக யோகராஜாவுக்கும், அல்பர்ட்டோ மானுவல் மார்டடினெஸ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மானுவல் கத்தியால் யோகராஜாவைக் குத்தி விட்டார். இதில் பலத்த காயமடைந்த யோகாராஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
யோகராஜாவைக் குத்திக் கொலை செய்த மானுவல் கைது செய்யப்பட்டார்.
படுகொலை செய்யப்பட்ட யோகாராஜா, 1980ம் ஆண்டு அகதியாக கனடாவுக்கு வந்தார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, தனது கடுமையான உழைப்பால் முன்னேறி சக தமிழர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமையன்று யோகராஜாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக