திங்கள், 29 நவம்பர், 2010

விக்கிலீக்ஸ்” கூறுவது போல அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவாளிகள் அல்ல : அயலுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோலி!

அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவாளிகளாக பணியாற்றுவதை “விக்கிலீக்ஸ்” இணையதளம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா அதனை மறுத்துள்ளது.அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவாளிகளாக பணியாற்றுகின்றனர் என ‘விக்கிலீக்ஸ்” வெளியிட்ட தகவலையடுத்து, அமெரிக்கா மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் அதுபோன்ற உளவுப் பணியில் ஈடுபடவில்லை என அமெரிக்கா அயலுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கொள்கைகள் மற்றும் செயல்முறைகளுக்குத் தகுந்தாற்போல் தூதரக அதிகாரிகள் தகவல்களை மட்டுமே சேகரிக்கின்றனர். அனைத்து நாடுகளிலும் உள்ள தூதர்கள் இதைத்தான் செய்துவருகின்றனர்.தூதர்கள் தூதராக மட்டுமே பணியாற்றுகின்றனர். ‘விக்கிலீக்ஸ்” கூறுவது போல புலனாய்வுப் பணியில் ஈடுபடவில்லை என குரோலி மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை: