புதன், 27 அக்டோபர், 2010

பிரான்சில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில்-சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்!

  பிரான்சில(பத்மநாபா-EPRLF)ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக்கிளைகளின் பிராந்திய. மாநாடு இம்மாநாட்டில் புலம்பெயர் தேசங்களில் கட்சிப்பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் மற்றும் கட்சியின் தலைமைக்குழு தோழர்களும் பங்குபற்றினர்கள். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் சில காத்திரமான முடிவுகள் எடுக்கபட்டுள்ளது.


பிரான்சில் சார்சல் என்னும் இடத்தில் 24.10.2010 அன்று மாலை 2 மணியிலிருந்து மாலை 8.30 மணிவரை இம்மாநாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன. வரவேற்புரையைத் தொடர்ந்து போராட்டத்தில் இதுவரை காலமும் மரணித்த மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் இரண்டு நிமிட அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் தி.சிறிதரன(சுகு) அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது. கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சரான தோழர் வரதராஜப்பெருமாள் அரசியல் நிலவரம் தொடர்பான விடயங்கள் பேசும்போது இது தோழர்களாகிய எமக்கு உற்சாகத்தை தருகின்றது. இதனூடாக எமது கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார். பின்பு
கட்சியின் கொள்கைத் திட்டம் மற்றும் தொடர்ந்து செல்லும் பணிகள் ஆகியன தெளிவாக விபரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: