வியாழன், 4 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் வழக்கு . 28 நிமிடம், 36 விநாடிகளுக்குள் விசாரித்து வாதங்களை கேட்டு தீர்ப்பை வெளியிட்ட உலகமகா அதிசயம் சுவாமிநாதன் என்ற பிரகிருதி

May be an image of text

 Giri Sundar : ஜி.ஆர்.சுவாமிநாதன் எனும் கலவர  மனிதன்.
இன்று தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை,
மாலை 5 மணிக்கே விசாரணைக்கு எடுத்தது மட்டுமின்றி, 
மாலை 5 மணி முதல் 6.05 மணி வரை ஏற்கனவே 01/12/25-ஆம் தேதியன்று மலை உச்சி மீது விளக்கு ஏற்ற வழங்கப்பட்ட தீர்ப்பை,
 நடைமுறைப் படுத்துகிறார்களா என கால அவகாசம் கொடுத்து பொறுமையாக பார்த்த பின்னர், 
அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்து, 
மீண்டும் வழக்கு விசாரணையை 6.05 மணிக்கு தொடங்கி இருதரப்பு வாதங்களை கேட்டு, 
உச்சநீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்புகளை மட்டும் துணைக்கு அழைக்காமல், 
இங்கிலாந்து நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் கடன் வாங்கி 
13 பக்கம் கொண்ட தீர்பை தயார் செய்து 
மாலை 6.33.36 PM மணிக்கு எல்லாம் அந்த தீர்பை இணையத்தில் பதிவேற்றம் செய்து, 
அதனை நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிப்பது எல்லாம் அவ்வளவு எளிதான காரியமா ?


.
அதாவது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றே 6.05 PM மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கில், இருதரப்பு வாதங்கள் கேட்டு ஆவணங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, 
உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் மற்றும் இங்கிலாந்து நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் முன்மாதிரியாக எடுத்து 
13 பக்க விரிவான தீர்ப்பை எழுதி அதனை சரி பார்த்து இறுதி செய்து, 
6.33.36 PM மணிக்கு அந்த தீர்பை நடைமுறைப்படுத்த இணையத்தில் பதிவேற்றம் செய்வது எல்லாம் எளிதான காரியமா என்ன ?
. 28 நிமிடம், 36 விநாடிகளுக்குள் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்து, இருதரப்பு வாதங்கள் கேட்டு, இப்படி ஒரு விரிவான தீர்ப்பை வெளியிடுவது எளிதான காரியமா?
இதில் இருந்து என்ன புரிகிறது, சுவாமிநாதன் எழுதிய அந்த தீர்ப்பு எதை வலியுறுத்துகிறது என்பதை எல்லாம் அவரவர் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுகிறேன்... ஆனால் ஜி.ஆர்.சுவாமிநாதன் வெறு ஒரு நீதிபதியோ???மனிதனோ👺 அல்ல... அதனை எல்லாம் தாண்டி அவன் ஒரு..... 🙄

கருத்துகள் இல்லை: