வியாழன், 4 டிசம்பர், 2025

ஏவிஎம் சரவணன் காலமானார்

May be an image of text that says "In loving memory M. SARAVANAN Dec 3, 1939- Dec 4, 2025 For last respects: Floor No.3, AVM Studios, 7:30am onwards, Dec 4, 2025 AVM ITUDIOS AVM Family & Staff AVM PRODUCTIONS"

 Meenakshi Sundaram :  திரு.ஏவி.எம்.சரவணன்  அவர்கள் இன்று அதிகாலை சென்னை ஏவி எம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு!
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய தூண்களில் ஒருவராக திகழ்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சாரவணன் ஐயா (86) இன்று அதிகாலை வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் . 
இந்திய திரையுலகில் ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாக அவரது மறைவு கருதப்படுகிறது.
நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த ஏ.வி.எம். சாரவணன் ஐயா, 
பல தலைமுறைகளுக்கு திரை உலகை வடிவமைத்த எண்ணற்ற வெற்றிப் படங்களை ஏ.வி.எம். நிறுவனத்தின் கீழ் உருவாக்கிய முக்கிய சக்தியாக இருந்தார். 
தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளவிட முடியாதவை.


அவரது உடல் இன்று மாலை 3.30 மணி வரை, ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், மூன்றாம் தளத்தில் பொதுமக்கள், உறவினர்கள், தொழில்துறை நண்பர்கள்  அனைவரும் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பார்வையாளன், ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி ஆகிய ஏ வி.எம். சரவணன் ஐயாவின் இழப்பு முழுத் திரைப்படத் துறையினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் அவருடைய சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

தினமணி : ஏவி மெய்யப்ப செட்டியார் தொடங்கிய ஏவிஎம் நிறுவனத்தை அவருக்கு பின்னர், சரவணன் திறம்பட நிர்வகித்து வந்தார். நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார்.
நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், மின்சார கனவு, சிவாஜி, வேட்டைக்காரன், அயன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்கள் மற்றும் சின்னத் திரை தொடர்களையும் தயாரித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதுகளைப் பெற்றவர் சரவணன். மேலும், சிறந்த திரைப்படங்களை தயாரித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சரவணன் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது

கருத்துகள் இல்லை: