மின்னம்பலம் - Mathi :காங்கிரஸ் கட்சிதான்.. சென்னையில இன்னைக்கு திமுக தலைவரான சிஎம் ஸ்டாலினை காங்கிரஸ் ஐவர் குழு சந்திச்சு பேசுனதை பத்தி நிறைய தகவல்கள் இருக்குய்யா..
கொட்டுகிற மழைக்கு நடுவே அனலடிக்கும் அரசியல்.. சொல்லுமய்யா
விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த போகுதுன்னு தீயா தகவல் பரவுன நேரத்துல காங்கிரஸ் கட்சி ஐவர் குழுவை அறிவிச்சது..
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர் தலைமையில அறிவிக்கப்பட்ட இந்த குழுவுல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் இடம் பெற்றிருந்தாங்க..
ஐவர் குழுவை அறிவிக்கும் போதே, ‘கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாட இந்த குழு’ன்னு அறிக்கையில சொல்லி இருந்ததே நெருடலா பார்த்தாங்க.. திமுக கூட்டணின்னு ஏன் தெளிவாக சொல்லக் கூடாதா?ன்னும் கேள்வி வந்துச்சு..
இப்ப இந்த ஐவர் குழுதான் அறிவாலயத்துல சிஎம் ஸ்டாலினை இன்னைக்கு (டிசம்பர் 3) சந்திச்சது..
இந்த சந்திப்புக்கு பிறகு அறிவாலய வாசலில் பிரஸ்ஸை மீட் பண்ண செல்வப்பெருந்தகை, “உங்கள் எல்லோருக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்தன; கிழக்கா? மேற்கா? தெற்கா? வடக்கா? என.. எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து இந்தியா கூட்டணி வலிமையாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு மிகப் பெரிய முன்னுதாரணம் இன்றைய சந்திப்பு”ன்னு சொல்லி இருந்தார்..
அதே மாதிரி, தொகுதிகள் எண்ணிக்கை பற்றிய கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்க”ன்னு மட்டும் சொல்லிட்டு பிரஸ் மீட்டையே முடிச்சுட்டாரு செல்வப்பெருந்தகை.
இதனால விஜய்யின் தவெகவுடனான கூட்டணிக்கு காங்கிரஸ் எண்ட் கார்டு போட்டுருச்சுன்னுதான் எல்லோரும் நினைக்கிறாங்க..
என்னய்யா.. ‘நினைக்கிறாங்க’ன்னு ஒரு இழுவை?
அப்படியா நினைக்கிறீங்க.. சரி சொல்றேனய்யா.. சிஎம் ஸ்டாலினை ஐவர் குழு சந்திச்சப்ப என்ன நடந்துச்சுன்னு பேச்சுவார்த்தைக்கு போனவங்க கிட்ட நாம் பேசுனோம், அப்ப, “ ஐவர் குழுவை சம்பிராதயமாக ஸ்டாலின் வரவேற்று நலம் விசாரிச்சுட்டு பேச ஆரம்பிச்சாங்க.. ஐவர் குழுகிட்ட, ”நீங்க குழு அமைச்சுருக்கீங்க.. நாங்க இன்னும் குழுவே போடலை.. ராத்திரி பகலா திமுக நிர்வாகிகள் எல்லாருமே SIR வேலையில தீவிரமா இருக்காங்க.. இப்போதைக்கு நாங்க முழு மூச்சா இதுலதான் கவனமா இருக்கோம். டிசம்பர் 11-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவாங்க..அதுல பெயர் விடுபட்டு போச்சுன்னா ஃபார்ம் 6 கொடுத்து சேர்க்கனும்..
அதனால வாக்காளர் பட்டியல் எல்லாம் வெளியாகும் போது ஜனவரிக்கு பிறகு நாங்களும் குழு அமைப்போம்.. அப்ப விரிவாக பேசிக்கலாம்” என சொன்னார் சிஎம். அப்படியே SIR-ல் என்ன என்ன பிரச்சனைகள் இருக்குன்னு கொஞ்சம் விளக்கமாகவும் காங்கிரஸ் ஐவர் குழுவிடம் சொன்னார்” என்றனர்.
இன்னைக்கு இவ்வளவுதான் பேசுனாங்களா?
எதுக்கய்யா அவசரம்.. ஐவர் குழுகிட்ட இவ்வளவுதான் ஸ்டாலின் பேசினாரு.. இதுக்கு பிறகு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஸ்டாலின் கிட்ட ஒன் டூ ஒன் பேசனும்னு சொன்னார்.. அதனால கிரிஷ் சோடங்கரிடம் ஸ்டாலின் கொஞ்ச நேரம் தனியாக பேசுனாரு..
ஓஹோ.. இந்த ஒன் டூ ஒன் சந்திப்பு பற்றி தகவல்கள் ஏதாச்சும் இருக்கா?
இருக்கே.. முதல்ல கிரிஷ் சோடங்கர் யாருன்னு சொல்றேன்.. கிரிஷ் சோடங்கர், வெறும் தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் மட்டுமல்ல.. ராகுல் காந்தியின் குட்புக்கில் இருக்கும் முக்கியமான நபர்.. காங்கிரஸ் ‘தலைகள்’ சிலருக்கு இருக்கும் பலவீனங்கள் எதுவுமே இல்லாத அக்மார்க் ‘ராகுல்’ தூதர்..
அப்படின்னா ரொம்ப முக்கியமான பேச்சுவார்த்தைதான் நடந்துருக்கு..
ஆமாய்யா.. கிரிஷ் சோடங்கர், ஸ்டாலின்கிட்ட பேசுனதா இன்னைக்கு பேச்சுவார்த்தைக்கு போன காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கசியவிட்டிருக்காங்க.. அதாவது, “திமுக கூட்டணியில காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட் கொடுக்கனும்.. அதே மாதிரி ஆட்சியில பங்கு தரனும்”.. இதுதான் ஸ்டாலினிடம் ராகுல் தூதரான கிரிஷ் சோடங்கர் வெச்ச டிமாண்டாம்..
இதை எடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின் ரசிக்கவே இல்லையாம்..
சிஎம் ஸ்டாலினைப் பொறுத்தவரை, “பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் போனாலும் எதிர்க்கட்சியாக உட்கார கூட தயாராக இருக்கிறாரே தவிர.. கூட்டணி ஆட்சியை பற்றி எல்லாம் சிஎம் ஸ்டாலின் யோசிக்கவே இல்லைங்கிறதுதான் யதார்த்தம்” என டிஜிட்டல் திண்ணையில ஏற்கனவே நாம பதிவு செஞ்சிருந்தோம்.. அதே நிலைப்பாட்டில்தான் இப்பவும் ஸ்டாலின் உறுதியா இருக்கிறாராம்..
இதைப் பத்தி அறிவாலய வட்டாரங்களில் பேசுனப்ப, “தேர்தல் நேரத்துல காங்கிரஸ்காரங்க இப்படித்தான் நெருக்கடி கொடுத்து பார்ப்பாங்க.. இப்படி செஞ்சா திமுக கீழ இறங்கி வரும்னு நினைக்கிறாங்க.. சிஎம் கிட்ட அப்படி எல்லாம் நடக்காது..
காங்கிரஸுக்கு 70 சீட்டை தூக்கி கொடுக்கிற அளவுக்கு அந்த கட்சி இங்க வளர்ந்திருக்கா? போன முறை 25 சீட் கொடுத்தோமே.. அதுக்கு பிறகாவது அந்த கட்சி வளர்ந்திருக்கா? பாஜக வளர்ந்த கொஞ்சம் அளவுக்கு கூட காங்கிரஸ் வளரலையே.. தேஞ்சுதானே போகுது..
நம்மகிட்ட பல முடியாத காரியங்களை செய்ய சொல்லி கேட்டுப் பார்த்தாங்க காங்கிரஸ்காரங்க.. முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டே கேட்டாங்க.. இப்ப தேர்தல் நேரத்துல 75 சீட், கூட்டணி ஆட்சின்னு மிரட்டிப் பார்க்கிறாங்க .. நாங்க எதிர்க்கட்சியாக கூட இருப்போமே தவிர இந்த கூட்டணி ஆட்சி எல்லாம் நமக்கு சரிப்படாது” என பொரிந்து தள்ளுகின்றனர்.
இந்த 70 சீட், கூட்டணி ஆட்சி டிமாண்ட் பத்தி காங்கிரஸ் சைடுல என்ன சொல்றாங்களாம்?
காங்கிரஸ் சீனியர்களிடம் நாம் பேசுனப்ப, ”இப்ப சிஎம் ஸ்டாலின் கிட்ட பேசுனது கிரிஷ் சோடங்கர்.. அவரு ராகுல் காந்தி ஒப்புதல் இல்லாமல் இப்படி எல்லாம் பேசவே மாட்டாரு..
அடுத்ததாக ராகுல் காந்தி பாதயாத்திரை கிளம்புறாரு.. பிரியங்கா காந்தியும் கூட வருவாங்க.. அப்ப தெரியும் தமிழ்நாட்டுல காங்கிரஸோட பலம் என்னான்னு.. எங்களுக்கான தேவையை நாங்க சிஎம் கிட்ட சொல்லிட்டோம்.. அவங்க ஏத்துக்கலைன்னா.. எங்களுக்கு இருக்கவே இருக்கே விஜய்யின் தவெக ஆப்சன்.. பொறுத்திருந்து பாருங்க” என சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக