செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

புதுச்சேரியின் இன்றைய நிலை - சங்கிகள் பின்னால் போன பின் சூரிய நமஸ்காரம் எதற்கு

 குட்டி தமிழ்நாடு என்று கருதப்பட்ட புதுச்சேரியின் இன்றைய நிலை அதிர்ச்சிக்கு உரியது! 
சங்கிகள் பின்னால் போனால் என்ன நடக்கும் என்பதை கண் முன்னே கொண்டடு வருகிறது  இக்கட்டுரை! 
Maha Laxmi :   நல்லா இருந்த புதுச்சேரி.பாஜக கூட்டணி ஆட்சியால். நாசமாய் போனதை பார்த்தாவது... 
தமிழ்நாட்டில் உள்ள நாம் அனைவரும் படிப்பினை பெற வேண்டும்..!
1 -  2023 ஆம் ஆண்டிலிருந்து  6 முதல் 11ஆம் வகுப்பு வரை அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒன்றிய 
அரசின் CBSE பாடத்திட்டம், புதுச்சேரி ஒன்றிய பிரதேச அரசால் கட்டாயத் திணிப்பு.

2.- 2024 ஆம் ஆண்டிலிருந்து..1 முதல் 12 ஆம் வகுப்பு முடிய அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒன்றிய அரசின் CBSE பாடத்திட்டம், புதுச்சேரி ஒன்றிய பிரதேச அரசால் கட்டாயத் திணிப்பு.



3.- 2025 ஏப்ரல் மாதம்.  CBSE பாடத்திட்டப் பொதுத்தேர்வில்... பல்வேறு அரசுப் பள்ளிகளில்... 50%க்கும் அதிகமான மாணவர்கள் ஃபெயில்...! 50%க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பாஸ்.

4  - 2025 ஜூலை மாதம். 10,000 க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர்.
வாவ்... 
ஒரு மாநிலத்தை கல்வியறிவற்ற மாநிலமாக மாற்றுவதுதான்... பாஜகவிற்கு மகத்தான வெற்றி..! அப்போதுதான் அங்கே பாஜக அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க முடியும். மாநில மக்களின் கல்வியறிவு பாஜகவின் வெற்றிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை.
புதுச்சேரியில் கடந்த 2021-ல் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக... என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தன் அடிமையாக மாற்றியது. பின்னர்.. பாஜக தன் அதிகாரத்தை முழு வீச்சில் செலுத்தத் துவங்கியது. 

அதன் விளைவாக புதுச்சேரி ஒன்றிய பிரதேசம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் அவசர அவசரமாக ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
மாநில அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்த எவ்விதமான பயிற்சியையும் கொடுக்காமல் திடீரென  மேற்கொள்ளப்படும் இந்த பாடத்திட்ட மாற்ற நடவடிக்கையால், பள்ளியில் இருந்து மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும், சேர்க்கை குறையும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அதனை எல்லாம் கண்டுகொள்ளாத புதுச்சேரி ஒன்றிய பிரதேச அடிமை அரசு, முழு வீச்சில்... ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயமாக்கி அமல்படுத்தி திணித்து முடித்தது. 
புதுச்சேரி யூனியன் டெரிடரி மக்கள்தொகை 12 லட்சம். இங்கே... 741 பள்ளிகள் உள்ளன.
வருடத்துக்கு... 15,000 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வும்... வருடத்துக்கு...14,000 மாணவர்கள் பிளஸ் டூ தேர்வும் எழுதுகிறார்கள். (அதாவது, 1000 பேர்க்கு குறைவாக மட்டுமே இடை நிற்றல் செய்கிறார்கள். இங்குள்ள 

5  -  பாலிடெக்னீக் செல்வோர் ஓரிரு நூறுகள் இருக்கும்).
இந்நிலையில்தான்....
இவ்வருடம்... பல்வேறு அரசுப்பள்ளிகளில், 9, 10, 11 12 ஆம் வகுப்புகளில் பாதியை விட குறைவான மாணவர்கள் மட்டுமே  பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சியை ஜீரணிக்கும் முன்பே...
இவ்வருடம்... 10,054 அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிச் சென்றுவிட்ட அடுத்த அதிர்ச்சி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 
அதாவது... புதுச்சேரியில் பள்ளி இடைநிற்றல் என்பது... கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது..

கருத்துகள் இல்லை: