![]() |
சுதந்திரன் - 30 -5- 1970 ; புதிதாக முளைத்துள்ள தமிழ்த்துரோகிகள்
1.சி .அருளம்பழம் (நாகநாதனை-- எஸ்ஜேவி செல்வாவின் சம்பந்தி - தோற்கடித்தவர்)
2.வீ. ஆனந்தசங்கரி (ஆலாலசுந்தரத்தை தோற்கடித்தவர்)
3.க.தியாகராசா (தமிழரசு பொதுச்செயலாளர் அ.அமிர்தலிங்கத்தை தோற்கடித்தவர்)
4.எஸ் யூ .தம்பிராசா ( தமிழரசு கட்சி தலைவர் இராசமாணிக்கத்தை தோற்கடித்தவர்)
5. கே டபிள்யு தேவநாயகம் ( சம்பந்தமூர்த்தியை தோற்கடித்தவர்)
1970 தேர்தல் முடிவுகள் வெளியானதும் எஸ்ஜேவி செல்வநாயகத்தின் சொந்த பத்திரிகையும் தமிழரசு கட்சியின் ஊதுகுழலுமான சுதந்திரன் பத்திரிகையின் துரோகிகள் பட்டியல் இது!
இந்த ஐந்து பேரும் செய்த குற்றம்தான் என்ன?
ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் இந்த ஐந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றதுதான் இவர்கள் செய்த ஒரே குற்றம்!
செல்வநாயகம் வகை தொகை இல்லாமல் வழங்கிய துரோகி பட்டங்கள் காலப்போக்கில் துப்பாக்கி குண்டுகளாக உருமாறியது ஒரு தற்செயலான நிகழ்வல்ல
செல்வா கம்பனியால் திட்டமிட்டு அரசியல் எதிரிகளை ஒழித்து கட்ட பயன்படுத்திய கேவலமான கொடூர உளவியல் ஆயுதம் அது!
அந்த ஆயுதத்தின் வளர்ச்சிதான் துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை என்ற கூக்குரல்!
மேடைக்கு மேடை தமிழரசு கட்சியின் அத்தனை பேச்சாளர்களும் ஓயாது முழங்கிய வெறிக்கூச்சல் அது.
அந்த கூச்சல்களை மந்தகாச புன்னகையோடு ரசித்து ரசித்து அரசியல் நடந்தியவர் திரு எஸ்ஜேவி செல்வநாயகம்1
எஸ்ஜேவின் அந்த புன்னகையை பார்ப்பதற்காகவே அவரின் தமிழரசு கட்சியின் பரிவாரங்களும் மேடைக்கு மேடை ரிப்பீட்டு அடித்த கூச்சல் அது.
பிரபா போன்ற மாஸ் ஹிஸ்ட்டீரியா கொலைஞர்கள் எல்லாம் இந்த கூட்டத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான்!
இவர்களால் துரோகி பட்டம் சூட்டப்பட்டு கொலையானவர்களும் ஒதுங்கி போனவர்களும் அடைந்த துயரம் கொஞ்சம் நஞ்சமல்ல !
சகமனிதர்களை மாற்று கருத்தாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்த குற்றவாளிகள் படித்த பள்ளிக்கூடம்தான் தமிழரசு கட்சி
தமிழர்கள் தப்பி தவறியும் வாழ்வில் வெற்றி பெற்றுவிட கூடாது என்று ஓயாமல் வேலைபார்த்த பாசிச கூட்டம் இது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக