வியாழன், 7 ஆகஸ்ட், 2025

கரூர் - மனநலம் பாதிக்க பட்டு சாமியாராக்கப்பட்டவர் தற்போது குணமாகி விட்டார்

May be an image of 4 people, hospital and temple

 தமிழ்க்கவி  : இந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஐயா
சுப்பிரமணி  இப்போது நலமாக இருக்கிறார்..
இவரை வைத்து பொருளீட்டியவர்கள் அவர்களும் நலமாக இருக்கிறார்கள். 
இவருக்கு முன்பும் பின்பும் பல்வேறு வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. 
இது குறித்து ஒரு நூல் கொண்டு வர வேண்டும் என்பதாக நான் முடிவெடுத்தேன் வழக்கு முடியும் வரை காத்திருந்தேன். 
வழக்கும் முடிந்து விட்டது 
நானும் விடுதலை ஆகி விட்டேன் 
இனி நூல் தொகுக்கும் பணி எனக்கு இருக்கிறது. 
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இந்த மனிதரை நான் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சி சிறிதளவு நான் வெற்றி பெற்று இருக்கிறேன் என்பதுதான் மனநிறைவு. 
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை வைத்து அவரை நிர்வாணமாக்கி சுயநலத்திற்காக பொருளயீட்டிய அந்த ஆதிக்க ஆண்டை சமூகம் இதுவரை அச்சப்படும் இல்லை, கூச்சப்படவும் இல்லை. 


இந்த வழக்குக்காக நான் செலவிட்ட தொகை என் மாத வருமானத்தில் பகுதி 
அது குறித்து எனக்கு எந்த அச்சமும் கவலையும் இல்லை .
ஒரு மனிதரை ஒரு வயதானவரை காப்பாற்றிய மனநிறைவு மட்டுமே இப்போது என்னுள் நிற்கிறது. 
ஆவணங்களோடு 
மூடநம்பிக்கைக்கு எதிராக,
ஆன்மீகத்தின் பேரால் நடக்கும் அட்டூழியத்திற்கு எதிராக ,
போலி சாமியார்களை ஆதிக்க சாதிகள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் அதற்குப் பின்னே இந்துத்துவ சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து மிக விரைவில் முகநூல் வாயிலாகவும் அல்லது எனக்கு நேரமும் பொருளாதாரமும் ஒத்துழைத்தால் நூலாகவும் கொண்டு வருவதற்கு நான் முயற்சிக்கிறேன்..
இந்த வழக்கிற்கு இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு நல்கிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் 
தோழமை உறவுகள் அனைவருக்கும் 
நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் நான் அவர்களை திருப்தி படுத்த விட முடியாது. 
ஆனாலும் நன்றி சொல்ல வேண்டும் 
நன்றி தோழர்களே..! 
இதில் துரோகிகளும் அடங்குவார்கள் என்பது தான் எனக்கு உள்ள ஒரே ஒரு குறைபாடு. 
என் கூடவே இருந்து 
எனக்கு துரோகம் செய்தவர்களை அந்த நூலில் நான் சுட்டிக் காட்டுவேன.
குறிப்பு: இவர் சிகிச்சை பெறும் நேரம் இடம் கரூர் அரசு மருத்துவமனை 
இவரைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சியில் நானும் இந்துத்துவ சங்கிகளால் தாக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.
காவல்துறையை எடுக்காத வீடியோவை நான் எடுத்தேன் அதை கமெண்டில் பதிவு செய்கிறேன்

கருத்துகள் இல்லை: