தினமணி : தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் செய்து, தேர்தல் ஆணையமே வாக்குகளில் மோசடி செய்து வருவதாக தொடர்ந்து ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்த நிலையில், அது தொடர்பான ஆதாரங்களுடன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜகவினர் கூறி வந்ததுபோல, அணுகுண்டை வீசியிருக்கிறார்.
மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தலில், பிரதமர் மோடி வெற்றி பெற வெறும் 25 தொகுதிகள்தான் தேவைப்பட்டன. அதற்கேற்ப, 25 தொகுதிகளில் வெறும் 33,000 வாக்குகளை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருந்தது.
ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் தரவுகளில்..
முதல் முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18 - 20 வயது உடையவர்கள் அல்ல.
80 வயது நபர் ஒருவர் முதல் முறை வாக்காளர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒரே விலாசத்தில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு தொழிற்சாலையில் பல வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில வாக்காளர்களுக்கு புகைப்படங்களே இல்லை.
ஒரே தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்ட முகவரியில் 40,009 பேர் இல்லை.
ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளன.
பல வாக்காளர்களுக்கு தந்தை, தாய் பெயர்கள் இல்லை.
மீளப்பதிவு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மாத்திரம் இவ்வளவு தில்லுமுல்லு!
ஜனநாயகத்தின் மீது எப்படிப்பட்ட தாக்குதல் இது? :
40,009 போலி முகவரிகள்
33,692 போலி படிவம் 6 உள்ளீடுகள்
11,965 நகல் வாக்காளர்கள்
10,452 வாக்காளர்கள் ஒற்றை முகவரிகளின் கீழ் நெரிசலில் சிக்கியுள்ளனர்
4,132 செல்லாத புகைப்படங்கள்
பி கே ஹரிபிரசாத் முன்னாள் காங்கிரஸ் பொது செயலாளர்:
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பாஜகவுக்கு ஆணி அடிக்கிறார்
B K Hariprasad : Leader of Opposition Rahul Gandhi Gandhi hits the nail on the head.
What unfolded in just one Assembly constituency is nothing short of a systematic assault on democracy:
40,009 fake addresses
33,692 bogus Form 6 entries
11,965 duplicate voters
10,452 voters crammed under single addresses
4,132 invalid photos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக