![]() |
ராதா மனோகர் :கலைஞரின் ஏழாவது நினைவு ஆண்டு
நான் கலைஞரை நேரில் பாத்ததில்லை
அதனால்தானோ என்னவோ கலைஞர் இன்றும் உயிரோடு இருப்பது போல்தான் உணர்கிறேன்
தமிழ்நாட்டின் இன்றைய பிரமிப்பு ஊட்டும் வளர்ச்சியில் கலைஞரின் முகத்தை நான் காண்கிறேன். .
கலைஞரை அகற்றி விட்டால் திமுகவை ஒழித்து விடலாம் என்று கருதியவர்களின் கனவுகளை வெறும் கனவுகளாக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும்,
திமுகவின் தன்னலம் கருதாத கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் இந்த கலைஞர் நினைவு நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியின் ஒவ்வொரு நிமிடமும் ஆதிக்க வாதிகளின் கனவுகளை நொறுக்கிய நிமிடங்களாகவே கடந்து கொண்டிருக்கிறது
இதுதான் திராவிட கோட்பாட்டின் வெற்றி!
இதுதான் பெரியார் அண்ணா கலைஞர் போட்டுவிட்ட திராவிட தடங்களின் பெருமை!
வெற்றி பாதையில் பயணிக்கும் போதுதான் கடும் அவதானம் தேவை.
இந்த திராவிட முன்னோர்கள் கட்டிய கோட்டையின் நிகழ்காலமும் எதிர்காலமும் இன்று பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்புணர்ச்சியில்தான் தங்கி உள்ளது.
கொஞ்சம் அசந்தாலும் வெற்றிகளை களவாடி விடக்கூடிய கொடியவர்கள்தான் இன்று ஒன்றியத்தின் அத்தனை மூலை முடுக்குகளிலும் பதுங்கி இருக்கிறார்கள்.
ஆரிய சகுனிகளின் கூடாரங்களில் வெறும் தேர்தல் கணக்கு கூட்டல்கள் மட்டும் பேசப்படுவதில்லை.
எந்த ஆயுதத்தையும் பாவிக்க தயங்க மாட்டாது அந்த சகுனி கூட்டம். .
பெரியார் அண்ணா கலைஞர் கட்டி எழுப்பிய தமிழ்நாடு,
ஆதிக்கவாதிகளின் அடிமடியில் கை வைத்து கொண்டிருப்பதை எப்படி சகித்து கொள்வார்கள்?
இந்த ஏமாற்றத்தை இலகுவில் கடந்து போக மாட்டார்கள்.
வரும் தேர்தல் நிச்சயமாக ஒரு பெரும் சவால்தான்.
ஜனநாயக விழுமியங்களை தகர்த்தெறியும் கூட்டத்தோடுதான் மோத வேண்டி இருக்கிறது.
கடுமையாக பணியாற்றவேண்டும் ..
தமிழர்களுக்கு பெரியார் அண்ணா கலைஞரை தவிர வேறு கலங்கரை விளக்கங்கள் கிடையாது!
இந்த ஒளிவிளக்குகளை பயன்படுத்தி கொண்டு பயணத்தை தொடருங்கள்.
வாழ்க திராவிடம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக