Vimalaadhithan Mani : கால்டு வெல் போல சங்கிகள் வெறுக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் போற்றும் மற்றுமொரு ஆங்கிலேயர் இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நவீன கல்விமுறையின் தந்தை என்று போற்றப்படும் லார்ட் மெக்காலே.
நம் பாட்டியும் கொள்ளுப் பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது?
அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருகுலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும்தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்தப் பெண்கள் எப்படிக் கல்வி பெற்றார்கள்?
கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ரெட்டைமலை ஶ்ரீநிவாசன் எப்படி லண்டன் சென்று படித்து இரட்டை பட்டம் வாங்கினார்?
இது போன்ற பல கேள்விகளுக்கு பதில்தான் லார்ட் மெக்காலே என்று அன்புடன் நினைவு கூறப்படும் "லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்காலே "
இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர் லார்ட் மெக்காலே. இந்தியாவிற்கு வந்த போதும் அதே மத சமூக சார்பற்ற கருத்துக்களை இங்கும் பரப்பினார்.
அவர் இந்தியாவுக்கு வரும் வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதரசா
3) கிறிஸ்தவ மிஷினரி
இவ்வளவுதான் இருந்தது .
இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பித்து வந்தன. இதற்கு இங்கிலாந்து அரசு செய்த செலவு பொதுமக்களுக்கு உபயோகமாக போய்ச் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது என்பதை அறிந்து முதன்முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய் மொழி என்கிற ஐந்து வித பாடங்களை உள்ளடக்கிய பொதுக்கல்வியை கொண்டு வந்தார் லார்ட் மெக்காலே.
இதற்கு அடுத்து அவர் செய்த சம்பவம் இன்னும் சிறப்பானது. அதுவரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுஸ்மிர்தி என்று தனித்தனியாக இருந்த சட்டத்தை, அனைவருக்கும் ஆன “இந்தியன் பீனல் கோடு” IPC ஆக கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்காலேதான்.
நமக்கெல்லாம் இன்று பாதுகாப்பாக இருக்கும் நவீனமுறை கல்வியையும், சட்டத்தையும் கொடுத்த நம் ஞானத்தலைவன், ஆம்பிளை சரஸ்வதி என்றுதான் போற்ற வேண்டும் இந்த மாமனிதர் லார்ட் மெக்காலேவை.
மனு தர்மம் போதிக்கும் அடிமை வாழ்வை கற்றுக்கொடுத்து நம்மை ஆண்டான்களின் அடிமைகளாக வைத்து இருந்த பண்டைய கல்விமுறையை ஒழித்து நம்மை சுதந்திர காற்றை சுவாசிக்க செய்ததால்தான் சங்கிகள் வெறுக்கும் ஒரு நபராக இருக்கிறார் லார்ட் மெக்காலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக