சனி, 9 மார்ச், 2024

அருந்ததிய அமைப்புக்களுக்கு சமூக வலைதள ஊடக பலத்தை ஏன் பார்க்க முடியவில்லை?

 Manoj Kumar  :   எந்த ஒரு அருந்ததிய அமைப்பிற்கும் சமூக வலைதள ஊடக பலத்தை பெரிதாக பார்க்க முடியவில்லை,,,
காரணம் பெரும்பான்மையான  அருந்ததிய மக்கள் அரசியல்படுத்தப்படாத மக்களாக இருக்கிறார்கள்,,,
ஏன் என யோசித்தால், அவர்கள் வாழ்வாதாரமே இன்னும் அதளபாதாளத்தில் தான் உள்ளது,,,
ஏன் என யோசித்தால், மற்ற பட்டியல் சாதிகளில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி சில குறிப்பிட்ட சதவீத மக்கள் மேலே வந்தது போல,அருந்ததிய சாதியில் அப்படி மேலே வந்தவர்கள் சதவீத அடிப்படையில் மிக மிக சொர்ப்பமே,,,
(பள்ளிப்படிப்பை தாண்டி, கல்லூரிக்கு செல்பவர்களும் சொர்ப்பமே)
மற்ற பட்டியலின சாதியில் குறிப்பிட்ட சதவீதம் நிலவுடைமை உடையவர்களாக இருப்பது போல, அருந்ததிய மக்கள் இல்லை,


பல ஏக்கர்கள் எல்லாம் தேவையில்லை,  குடியிருக்கும் இடம் கூட சொந்தமாக வைத்துள்ள அருந்ததிய மக்கள் மிக,மிக சொர்ப்பமே,,,
இவை எல்லாம் எதற்கு சொல்றேன்னா,மற்ற பட்டியலின மக்கள் திமுக கூட்டணியிலும் இருக்கிறார்கள்.
அதிமுக கூட்டணியிலும் இருக்கிறார்கள், இன்னும் சொல்லப் போனால் பாஜவிற்கு விலை போன தலைவர்கள் கூட இருக்கிறார்கள்,,,
ஆனால் யாருக்கும் விலை போகாமல் ஒட்டுமொத்த அருந்ததிய இயக்கங்களும்,கட்சிகளும் இப்போது திமுகவோடு நிற்கிறார்கள்,,,
அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்கு கவலைப்படுவதும்,திமுகவிடம் டிமேன்ட் செய்யும் அளவிற்கு அவர்களும் கட்டமைப்பில் வளர வேண்டும் என ஆசைப்படுவதும்,
அதற்கான புற உதவிகள் செய்வதும் தான் உண்மையான முற்போக்கு !!
இருப்பதிலேயே அடிமட்டத்தில் இருப்பவர்களை பற்றி பேசாமல்,விவாதிக்காமல் தலித்தியமும் முழுமை பெறாது,,பெரியாரியமும் முழுமை பெறாது,,,

Babu Babu :என் நீண்ட நாள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய தோழர் மனோஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.

R Kannan :  தமிழ்நாட்டில் தொட்டியநாயக்கர் என்கிற சமுதாயம் உள்ளது.
இவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் 40 லட்சம்பேர் வசிக்கின்றனர்.
தூத்துக்குடி விருதுநகர் திண்டுக்கல் தேனி கரூர் நாமக்கல் மாவட்டங்களில் அடர்த்தியாகவும்.திருநெல்வேலி மதுரை திருப்பூர் கோவை ஈரோடு மாவட்டங்களில் பரவலாகவும் வசிக்கின்றனர்.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மூன்று எம்எல்ஏ வை மட்டுமே இந்த சமூகம் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்த சமூகம் வாய்ப்பை கூட பெறவில்லை.
அருந்ததிய சமுகத்திற்கு கிடைத்த வாய்ப்பை விட குறைவுதான்.
இதற்காக அருந்ததி சமுதாயமும் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.சமூக நீதி என்பது எல்லோருக்குமானதாக இருக்கவேண்டும்.

Kamalakannan Ramalingam : எல்லா அருந்ததிய மக்களும் திமுகவுடன் இருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மை இல்லை தோழர்

Manoj Kumar :  Kamalakannan Ramalingam வேற எது உண்மைங்க ?? தோழர் அதிமான்,தோழர் நாகை திருவள்ளுவன்,தோழர் வெண்மணி,தோழர் கார்கி என அனைவருமே திமுக கூட்டணியை ஆதரித்து தான் நிற்கிறார்கள்,,,
நாகராஜன் என்பவர் அதிமுகவோடு போன முறை நின்றார்,,
அவ்வளவு தான்,,மற்ற சாதிகளில் இருந்து பாஜக ஆட்களை வென்றெடுத்தது போல அருந்ததிய இயக்கங்களையோ,கட்சிகளையோ வாங்க முடியவில்லையே ??
இருக்கிற பட்டியலின சாதிகளிலேயே பெரியார் எங்ளுக்கு என்ன செய்தார் எனக் கேட்காத நன்றியுள்ள தலைவர்கள் இங்கே தான் உள்ளனர்,,

Manoj Kumar : Kamalakannan Ramalingam நான் இயக்கங்களை, கட்சிகளை சொல்கிறேன்,,அவர்கள் தானே பிரதிநிதிகள்,,

Kamalakannan Ramalingam : Manoj Kumar இவர்கள் அனைவரும் வாக்கு வங்கிகளாக இருக்கிறார்களா இருந்திருந்தால் சென்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை பெல்ட்டை திமுக இழந்து இருக்குமா

Manoj Kumar : Kamalakannan Ramalingam வேறு எப்போதும் இல்லாத வகையில் அதிமுக தரப்பில் இருந்த அருந்ததிய மக்கள் வாக்கு திமுக தரப்பிற்கு கை மாறியுள்ளது தோழர்,,ஆனால் திமுகவின் கவுண்டர் வாக்கு வங்கி,சாதி பாசத்தில் அப்படியே எடப்பாடி தரப்பிற்கு தாவியது,,நடந்தது இது தான்,,,

கருத்துகள் இல்லை: