ராதா மனோகர் : இந்த அம்மையார் ஒரு தெரு மூலையில் மிக சாதாரணமாக பெஞ்சில் அமர்ந்து அலை பேசியை கிளறி கொண்டிருக்கிறார்
இவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டார நாயக்கா !.
ஒரு தேர்தல் பிரசார மேடையில் வை
த்து தற்கொலை குண்டுதாரியின் குறியில் இருந்து ஒரு கண்ணை மட்டும் பறிகொடுத்துவிட்டு உயிர்தப்பினார். அதில் பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
அதன் பின்பு இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.
இவரது ஆட்சிக்காலத்தில்தான் (1995) இலங்கை வடகிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்ட தலைநகரங்களும் முற்று முழுதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இவரது மகனும் மகளும் இங்கிலாந்தில் டாக்டர்களாக பணியாற்றுகிறார்கள்.
பத்துக்கு மேற்பட்ட பரம்பரைகளுக்கு தேவையான சொத்து இருந்தும் பிள்ளைகளை ஒழுங்காக படிப்பித்து டாக்டர்களாக்கி உள்ளார்.
இருவரும் இங்கிலாந்தில் பணிபுரிகிறார்கள்.
வாரிசுகளை ஊதாரிகளாக தெருவில் விடவில்லை.
இவருக்கு பிரெஞ்சு மொழி சரளமாக தெரியும் . பிரெஞ்சு தொலைக்காட்சிகளில் பிரெஞ்சு மொழியிலேயே பேட்டிகள் வழங்கி உள்ளார் ( இந்திரா காந்தியை போல)
இவரால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வு திட்டம்தான் தமிழர்களுக்கு கிடைத்த உச்சபட்ச அதிகாரமாகும்.
இவரது தீர்வு திட்டத்தை வரைந்தவர் அமரர் நீலன் திருச்செல்வம்
அதற்காகவே அவரையும் தற்கொலை குண்டுதாரியை அனுப்பி கொன்றார்கள்
என்னை பொறுத்தவரை எள்ளளவு கூட வெறுப்பு அரசியல் இல்லாத ஒரு தலைவி!
எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தவர்?
சதா தற்கொலை குண்டுதாரிகளால் குறிவைக்கப்பட்டவர்!
சுறுசுறுப்பான அரசியல் இருந்து ஒய்வு பெற்றபோதும் . சத்தம் போடாமல் ரணிலையும் மைத்திரியையும் ஒன்று சேர்த்து ( 2015) ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வீழ்த்தியவர்
ராஜபக்சவின் வீழ்சியை திட்டமிட்டவர் இந்த அம்மையார்தான் என்பது ராஜபக்சவுக்கே வீழ்ந்த பின்தான் தெரிந்தது!
இப்போது மிக சாதாரணமாக தெருவோரம் காற்று வாங்கி கொண்டு எவ்வளவு நிதானமாக காட்சி அளிக்கிறார்?
இவரது வாழ்வில் பல திரைப்படங்களுக்கு உரிய கதைகள் இருக்கின்றன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக