புதன், 6 மார்ச், 2024

ஃபேஸ்புக் Facebook, இன்ஸ்டாகிராம் Instagram முடங்கியது!

மின்னம்பலம் - Kavi : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது.
இன்று இரவு 8  மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்கள் திடீரென்று முடங்கி உள்ளன.
இந்த மூன்று சமூக வலைதளங்களும் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த சமூக பக்கங்கள் செயல்படாமல் முடங்கியதோடு, பயனர்களின் ஃபேஸ்புக் கணக்குகளும் லாக் ஆவுட் ஆகியுள்ளன.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தால் ஹேம்பேஜ் தெரியாமல் உள்ளது. ரிஃபெரஸ் செய்தாலும் கூட Couldn’t Refresh feed என தோன்றுகிறது.

எக்ஸ் தளத்துக்கு போட்டியாக தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் சமூகதளத்துக்கு சென்றால் Sorry, Something went Wrong. Try Again’ என வருகிறது.

மெட்டா நிறுவனத்தின் மூன்று தளங்களும் ஒரே சமயத்தில் முடங்கியுள்ளதால் அதனை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் ஆகியவை முடங்கியிருப்பதாக பயனர்கள் எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்து வருவதால், #instagramdown, #facebookdown, #meta ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

மெட்டா நிறுவனத்தின் முக்கிய சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்று சமூக தளங்களும் முடங்கியதாக கூறப்படுகிறது.
பிரியா

கருத்துகள் இல்லை: