செவ்வாய், 2 ஜனவரி, 2024

மோடி நிகழ்வில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தடை? திருச்சி சூர்யா இருந்தாரே.. கோர்த்துவிடும் காயத்ரி!

Tamil Nadu BJP leader Annamalai not allow to PM Modi Function?

tamil.oneindia.com - Mathivanan Maran :  சென்னை: பிரதமர் மோடியை வரவேற்பதற்கும் திருச்சி விழாவில் பங்கேற்பதற்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அனுமதிக்கப் படவில்லையா என முன்னாள் பாஜக நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம் சுட்டிக்காட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடி வருகையின் போது திருச்சி மாநகரம் தூய்மையாக இருக்க வேண்டும் ; ஒரு இடத்தில் கூட குப்பையே இருக்கக் கூடாது என தொண்டர்களுடன் களமிறங்கி இன்று காலை அதீதமாக தூய்மைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த போது ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளில் சர்ச்சைக்குரிய நபரான பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதாக சொல்லப்பட்ட திருச்சி சூர்யாவும் கூட இடம் பெற்றிருந்தார்.  

ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் இடத்தில் தென்படவில்லை.

    #GoBackModi திமுக ட்ரெண்டிங்கில் இருக்கும்போது. மோடி அமைதியாக #Goback420மலை சொல்லிவிட்டார். அண்ணாமலை விழாவிலோ வரவேற்பிலோ காணப்படவில்லை. டெய்சியின் சகோதரர் மெரினா பீச் புகழ் திருச்சி சூர்யாவை கூட மோடி சந்திக்க அனுமதிக்கப்பட்டார். பாவ யாத்திரை தொடரும்.
    — Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) January 2, 2024

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா மற்றும் ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்க விழா நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, எல்.முருகன், திமுக- பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்விலும் அண்ணாமலை தென்படவில்லை.

அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! பரபரப்பை கிளப்பிய காயத்ரி ரகுராம்! விலகலை மறக்க முடியுமா?அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! பரபரப்பை கிளப்பிய காயத்ரி ரகுராம்! விலகலை மறக்க முடியுமா?

இதனை தமது எக்ஸ் பக்கத்தில் பாஜகவின் முன்னாள் நிர்வாகியான நடிகை காயத்ரி சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். "#GoBackModi திமுக ட்ரெண்டிங்கில் இருக்கும்போது. மோடி அமைதியாக #Goback420மலை சொல்லிவிட்டார். அண்ணாமலை விழாவிலோ வரவேற்பிலோ காணப்படவில்லை. டெய்சியின் சகோதரர் மெரினா பீச் புகழ் திருச்சி சூர்யாவை கூட மோடி சந்திக்க அனுமதிக்கப்பட்டார். பாவ யாத்திரை தொடரும்" என காயத்ரி அந்தப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கம் போல நடிகை காயத்ரியை பாஜகவினர் மிக கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி நிகழ்வில் அண்ணாமலையும் இடம் பெற்றிருந்தார் என ஒருவரும் பதிவிடவும் இல்லை; படத்தை பகிரவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: