மாலை மலர் : உத்தரப்பிரதசேம் மாநிலம் எட்டாவா பகுதி அருகே புதுடெல்லி- தார்பாங்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 4 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அவை தீக்காயங்களாக இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எட்டாவா போலீஸ் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
மேலும் , தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருதாக தகவல் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்து சஞ்சய் குமார் கூறுகையில், "டெல்லியில் இருந்து பீகார் சென்றுக் கொண்டிருந்த ரெயிலில் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் வழங்கப்படும்" என்றார்.ஆனால், ஒரு பெட்டியில் மட்டுமே தீப்பிடித்ததாக வட மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறுகையில், "புது டெல்லி- தர்பங்கா சிறப்பு விரைவு வண்டி எண் எஸ்1ல் இருந்து எட்டாவா அருகே சராய் போபட் சந்திப்பில் உள்ள காவலர் புகை வெளியேறுவதைக் கவனித்தார்.
பின்னர், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது வரை உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக