திங்கள், 13 நவம்பர், 2023

சுப்ரமணியன்சாமி என்னும் அரசியல் குள்ளநரி!

1 நபர் மற்றும் , ’திராவி, வெளியீடு அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

Vimalaadhithan Mani :  சுப்ரமணியன்சாமி என்னும் அரசியல் குள்ளநரி
வெளிதோற்றத்தில் காமெடியன் போன்று தோன்றும் பாஜகவின் சுப்ரமணியன்சாமி ஒரு சர்ச்சைக்கு உரிய அரசியல்வாதி என்பது நம் அனைவருக்கும் தெரியும் .
ஆனால் இந்திய அளவில் ஒரு மிகவும் அபாயகரமான  பின்னணி கொண்ட அரசியல் சதுரங்கத்தில் கைதேர்ந்த ஒரு அரசியல் குள்ளநரி அவர் என்பது நிறைய பேருக்கு தெரியாது.
அவர் சார்ந்த பிராமண இனத்தின்பால் அவருக்கு இருக்கும் வெறித்தனமான பிடிப்பை தவிர அவருக்கென்று ஆழ்ந்த அரசியல் கொள்கைகளோ, தத்துவார்த்த சிந்தனைகளோ எதுவும் கிடையாது.
அவருக்கு எப்போதும் ஒரே ஒரு குறிக்கோள் மட்டும்தான்.
பதவி மற்றும் அதிகாரத்தில் அவர் இருக்க வேண்டும்.,
மற்றவர்களை அவருடைய அதிகாரத்துக்கு கீழ் அடக்கி வைத்து இருக்க வேண்டும் என்ற பச்சை மனு நீதிதனம் மட்டுமே. முதலில் கலைஞருடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதாவை எதிர்த்தார்.
பின் பதவிக்காக ஜெயலலிதாவுடன் சேர்ந்துகொண்டு திமுக ஆட்சியை 1989 ல் அநியாயமாக பழி சுமத்தி கலைக்க வைத்தார்.

ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து கொண்டு அஜித்சிங் உதவியுடன் ஜனதா தளம் கட்சியை உடைத்து மிகவும் நேர்மையாளரான விபி சிங்கின் ஆட்சியை 11 மாதங்களில் கலைத்து அரசியல் நிர்வாக திறமை அற்ற சந்திரசேகரை பிரதமர் ஆகி அதற்கு பரிசாக சட்டத்துறை மந்திரி பதவியை பெற்றார். அதன் மூலம் நாடாளுமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் மோதல் போக்கை உருவாக்கி பலரின் கண்டனத்துக்கு ஆளானார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை தன் இஷ்டத்துக்கு பந்தாடினார். சக பிராமணரான TN சேஷனை தன்னுடைய அரசியல் செல்வாக்கால் தலைமை தேர்தல் கமிஷனர் பதவியில் அமர வைத்தார். டெல்லியில் தலைமை அட்டர்னி ஜெனரல், இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் போன்ற பதவிகளில் இருந்த சக தமிழக பிராமணர்களை சேர்த்து கொண்டு மிக சக்தி வாய்ந்த பிராமண அரசியல் லாபியை டெல்லியில் முன்னெடுத்தார்.

ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர், தன்னுடைய நண்பர் ராஜீவ் காந்திக்காக சந்திரசேகர் அமைச்சரவையில் தன்னுடைய கையில் இருந்த நீதித்துறையை வைத்துக்கொண்டு எல்லா வகையான அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்து ராஜீவ் காந்தியை சிக்க வைத்த போபோர்ஸ் ஊழல் வழக்கை நீர்த்து போக வைத்தார். ஆனால் பின் அவருடைய தோழர்களான இஸ்ரேலின் விருப்பத்திற்கு இணங்க சந்திராசாமி என்னும் போலி சாமியாரையும் அவருடைய அடிமைகளான காங்கிரசின் பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ் போன்ற பிரதமர் பதவியின் மீது கண் வைத்து திட்டம் தீட்டியவர்களையும் கையில் போட்டுகொண்டு விடுதலை புலிகள் , காலிஸ்தான் தீவிரவாதிகளின் சதி திட்டத்தால் அவருடைய நண்பராக இருந்த ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு சூத்திரதாரியாக இருந்தார்.

இது ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்பிரமணியன் சாமியின் மீது சந்தேகமாக எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை சுப்ரமணியன்சாமி மீது பகிரங்கமாக வைத்தவர் அப்போது அவருடைய கட்சி பிரமுகராக இருந்த  தற்போது டீவி விவாதங்களில் பொறி கிளம்ப பேசும் திருச்சி வேலுசாமி அண்ணன் அவர்கள். ராஜீவ் காந்தி கொலை நடந்த உடனே அந்த செய்தி வெளி உலகத்துக்கு தெரியும் முன்னே சுப்ரமணியன்சாமிக்கு தெரிந்தது எப்படி, ராஜீவ் கொலைக்கு  பின் உடனடியாக சுப்ரமணியன் சாமி கொலைகாரர்கள் பதுங்கி இருந்த பெங்களூருக்கு தரைமார்க்கமாக அவசர அவசரமாக சென்றது ஏன் என்று பல கேள்விகளை திருச்சி வேலுசாமி அண்ணன் ஜெயின் கமிஷன் முன் ஆஜராகி அதிகாரபூர்வமாக எழுப்பினார்.

சுப்பிரமணியன் சாமியின் நெருங்கிய தோழரான நேமிசந்த் ஜெயின் என்ற இயற்பெயற் கொண்ட சந்திராசாமி பல பண மோசடி நடவடிக்கைகளில் தொடர்பு கொண்டவர்.  புருனே சுல்தான் , பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரெட் தாட்சரின் மகன் போன்ற மிக பெரும் பின்புலம் கொண்ட உலக பணக்கார்களுடனும் அதனான் கசோஸ்கி போன்ற உலகளாவிய ஆயுத வியாபாரிகள் பலருடனும் லாபியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மில்லியன் கணக்கில் கையூட்டு பெற்று இந்திய அரசின் சட்ட நடவடிக்கைக்கு உள்ளானவர். இப்படி அரசியல் சதுரங்கம், அதிகார துஷ்பிரயோகம், சாதி வெறி , கொலை சதி, சட்ட விரோத செயல்கள் என்று சகல குற்ற நடவடிக்கைகளிலும் பெயர் அடிபட்ட பெருமை உடைய  பஞ்சமா பாதகர் இந்த சுப்ரமணியன்சாமி. திமுகவுக்கு எதிராக அவர் எப்போதுமே காழ்ப்புணர்வுடன் இருக்க காரணம் திமுகவின் விடுதலைப்புலி ஆதரவு நிலைப்பாடு, சாதி, சனாதன மற்றும் பார்ப்பனீய எதிர்ப்பு .

கான்பூரில் அகில உலக பிராமணர்கள் மாநாடு நடத்தியது, பிராமணரான ஜெயலலிதாவுடன் அவருக்கு இருந்த நெருங்கிய நட்பு, சந்திரலேகா என்னும் முன்னாள் IAS அதிகாரியான பிராமணரை தன்னுடைய கட்சியின் முக்கிய உறுப்பினராக வைத்துக்கொண்டு எப்போதும் உடன் கூட்டிக்கொண்டு சுற்றுவது போன்றவை அவருடைய பிராமண சாதி பாசத்துக்கு சான்றுகள். பிராமணனான சாணக்கியன் போல தன்னை நினைத்துக்கொண்டு இந்திய அரசியல் களமே தன்னுடைய கட்டுப்பாட்டிலும் கண்ணசைவிலும்தான் இயங்குகிறது என்று ஊளை உதார் மற்றும் வெற்று ஜம்பங்களை அடித்து அரசியல் சித்து விளையாட்டுகளை நடத்தி கொண்டு வரும் ஒரு அரசியல் குள்ள நரிதான் இந்த சுப்ரமணியன்சாமி.
ஆனால் காத்திரமாக கள அரசியல் செய்யும் திமுகவிடம் மட்டும் இவருடைய வெற்று ஜம்பங்கள் என்றும் பலித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 "அரண்மனை நாயே அடக்குடா வாயை"" என்று சுப்ரமனியன் சாமியை மிக கடுமையாக பகிரங்கமாக முரசொலி மூலம் விமரிசித்த பெருமைக்குரியது திமுக.
தலைவர் கருணாநிதி அவர்கள் அவருக்கே உரிய நக்கல் பாணியில் சுப்ரமணியன்சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய ஒரு மன நோயாளி என்று விமரிசித்து உள்ளார் .
 இது தவிர முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, ஜெயில் சிங் போன்ற மிக உயரிய அரசு பொறுப்பில் இருந்தவர்களால் இவருடைய பொறுப்பற்ற அரசியல் சித்து விளையாட்டுகளுக்காக கண்டனம் எழுப்பப்பட்ட பெருமைக்கும் உரியவர் இந்த குள்ள நரி .

இப்போது இந்த குள்ள நரி அவரை மதிக்காத,மந்திரி பதவி கொடுக்காத விஸ்வகுருவை பார்த்து கூவ ஆரம்பித்து இருக்கிறது. பார்க்கலாம் என்னதான் நடக்குமென்று

கருத்துகள் இல்லை: