ராதா மனோகர் : இலங்கை இந்திய காங்கிரஸ் உதயம் - 25 ஜூலை 1939 இலங்கை! .
தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள பல கம்பனிகளில், டிராம் வண்டி சேவை . ஹோட்டல்களில் பணிகள் . நகர சுத்திகரிப்பு பணிகள் . துறைமுக சேவைகள் மற்றும் போக்குவரத்துக்கு துறைகளில் பணிபுரிந்து வந்தவர்களின் நலனுக்ககாக 1925 ஆண்டிற்கும் 1930 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பல இயக்கங்களும் சங்கங்களும் இயங்கின
இந்த அமைப்புகள் திரு ஏ இ குணசிங்கா தலைமையில் இலங்கை தொழிலாளர் யூனியன் என்ற அமைப்பில் இன மத பேதமற்று சிங்கள தமிழ் முஸ்லீம் மலையாள மற்றும் மலாய் இனமக்களுமாக இணைந்திருந்தனர்.
இந்திய வம்சாவளியினர் இலங்கையை சுரண்டி கொழுக்க வந்தவர்கள் என்றும், எல்லா சிறுபான்மை இனமக்கள் மீதும் வெறுப்பு தோன்றலாயிற்று
மேடைக்கு மேடை மலையாளிகளை கொச்சியான் என்றும் , யாழ்ப்பாண சுருட்டை பகிஸ்கரிக்க வேண்டும் என்று பேச தொடங்கினர் எல்லா இடங்களிலும் ஏன் யாழ்ப்பாணத்தவர் கடைகள் வைத்திருக்க வேண்டும் , எல்லா நகர மன்றங்களிலும் ஏன் இந்தியர்கள் வேலை செய்யவேண்டும் என்றெல்லாம் பேசி இனவாத நெருப்பை மூட்ட ஆரம்பித்தார்
இவர் செய்த நெருப்பு பிரசாரத்தின் பயனாக 1936 இல் நடந்த லெஜிஸ்டலேடிவ் கவுன்சில் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில் வெற்றி பெற்று அங்கத்தவரானார்
டி எஸ் சேனநாயக்க பிரதம மந்திரியானர். 15000 இந்தியர்களையும் நாடுகடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்தார்
அதை எதிர்த்து திரு ஜி ஜி பொன்னம்பலம் 6 மணித்தியாலங்கள் காரசாரமாக பேசினார் . சு. நடேசபிள்ளை , கோ நடேசய்யர் . எஸ் வைத்திலிங்கம் , அருணாசலம் மகாதேவா ஐ எக்ஸ் பெரேரா ஆகியோரும் எதிர்த்து பேசினார்கள்.
இந்தியர்களால் எமது வேலைவாய்ப்பு போன்றவை பறிபோகிறது என்று தென்னிலங்கை பொதுவெளியில் பெரிய அளவில் விவாதங்கள் நடந்தது
இந்த நிலையில் பல அமைப்புக்களாக சிதறி இருந்த இந்திய மக்களை ஒன்று சேர்த்து இயக்குமுகமாக காந்தியின் தூதராக பண்டிட் நேரு வந்தார்
கடுமையான முயற்சிக்கு பின்பக்க ஒருவாறு எல்லா இந்திய அமைப்புக்களையும் ஒரு குடைக்குள் கொண்டுவருவதில் நேரு வெற்றி பெற்றார்
ஜூலை 25 1939 அன்று அதிகாலை பொழுதில் நேருவின் முன்னிலையில் இலங்கை இந்திய காங்கிரஸ் உதயமானது.
முதலாவது தலைவராக திரு வி .ஆர் எம் வி ஏ .லக்ஷ்மணன் செட்டியார் தெரிவு செய்யப்பட்டார்.
அப்போது இவர் பலம் வாய்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் சங்க தலைவராகவும் இருந்தார்
அதே காலப்பகுதியில் இவர் மதராஸ் மாகாணத்தின் புதுக்கோட்டை தொகுதி உறுப்பினராக நான்காவது தடைவையாகவும் வெற்றி பெற்று இருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக