மின்னம்பலம் :: சிவகங்கை மக்களவை காங்கிரஸ் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 4) மனு தாக்கல் செய்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது பஞ்சாப் மின்சார நிறுவனத்துக்கு சீன பணியாளர்கள் கொண்டுவர படுவதற்கு விசா கொடுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் முதல் குற்றம்சாட்டப்பட்டவராக பதிவு செய்யப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரும் கூட்டாளியுமான பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தப் பின்னணியில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
"கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மிகவும் தீவிரமானது. ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை இந்த இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. புலனாய்வு அமைப்பினர் அழைக்கும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று சொல்லி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்டது சிறப்பு நீதிமன்றம்.
இந்த பின்னணியில் கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக