மலையக தாய் : திரு ரணில் விக்கிரமசிங்கா ஐந்து தடவைகள் பிரதமர் ஆசனத்தை அலங்கரித்தார் ஆனால்....
1. கொழும்பு , கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக் கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்து கொள்ளவில்லை.தனகென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது மரணத்தின் பின்னர் தனது பாடசாலையான ரோயல் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்து உயில் எழுதி கொடுத்து விட்டார்.
2 . அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் யார் என்பது பொது மக்களுக்கு பெரிதாகத் தெரியாது. அவர்கள் எவரையுமே அரசாங்கப் பதவிகளில் ஒருபோதுமே இருக்கவில்லை. வாரிசுகளும் இல்லை. வாரிசுகளுக்காக பதினான்கு தலைமுறைகளுக்கு நாட்டைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை.
3 . வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களனி விகாரை முழுக்க முழுக்க அவரது தாயாரின் அன்பளிப்புகள் மூலம் நிறுவப்பட்டது. அதன் நிர்வாக சபையில் நீண்ட காலம் பணியாற்றினார்.பின்னர் அதிலிருந்து விரட்டவும் பட்டார். ஆனால் அந்த விகாரையையோ வேறெந்த விகாரைகளையோ அவர் ஒருபோதும் தனது அரசியலுக்கு பயன்படுத்தவில்லை.
4 . தொலைக்காட்சி மற்றும் கம்பியூட்டர்களை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்ததில் அவர்தான் முன்னோடி அவரது ஒரு சகோதரரே முதன்முதலாக ஒரு தொலைக்காட்சி ( TNL) நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்தத் தொலைகாட்சியையோ ஒருபோதும் தனது அரசியலுக்குப் பயன்படுத்தவில்லை.
ஒரேயொரு தடவை அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல ஊடகவியலாளர் சன்னஸ்கலவின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டார். அப்போது சன்னஸ்கல ' உங்கள் குடும்பமும் தான் தொலைகாட்சியையே நாட்டுக்குத் தந்தது. அரசாங்கத் தொலைகாட்சிக்குக் கூட நீங்கள் ஏன் இவ்வளவு காலத்தில் ஒரு தடவையேனும் வரவில்லை ?' எனக் கேட்டபோது , ஒரு புன்னைகையோடு ' என்னை யாரும் அழைக்கவில்லை ' என்றுதான் பதிலளித்தார்.
5 . தோல்வி மேல் தோல்விகள் வந்த போதிலும் ஒருபோதும் துவண்டு போகவில்லை. மக்களைக் கடிந்துக்கொள்ளவில்லை, விகாரைகள் தோறும் அழுதுக்கொண்டு அரசியல் செய்யவில்லை.
6 . தனது அரசியலுக்காக ஒருபோதும் பெளத்த மதத்தையோ, சிங்கள இன உணர்வையோ , தேசப்பற்றையோ விலைக்கூறி விற்கவில்லை.
அந்த மகத்தான அரசியல் ஞானிதான் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் !
இவர் பிரதமராகவோ அல்லது புதிய அரசாங்கத்தில் பங்காளியாகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தால்தான் நாட்டிற்குத் தேவையான டொலரைக் கொண்டு வர முடியும் என்பதாக பலரும் சிலாகித்துப் பேசக் கூடியதாக இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக