செவ்வாய், 5 ஏப்ரல், 2022

இலங்கை சுயமரியாதை இயக்க முன்னோடி எஸ் டி சிவநாயகம்

 இராதா மனோகர் : அமரர் எஸ் டி சிவநாயகம்

RM.veerappan S.Rasathurai S.T.sivanayakam


இலங்கை பகுத்தறிவு கழக முன்னோடி
மட்டக்களப்பு பகுத்தறிவு கழக நிறுவனர்
இலங்கை திராவிட இயக்க முன்னோடிகளில் முக்கியமானவர்
அமரர் எஸ் டி சிவநாயகம் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் திரு செல்லையா ராசதுரை (முன்னாள் அமைச்சர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் திரு எஸ் டி சிவநாயகம் பற்றி சில நினைவுக
ST.Sivanayakam Manavai Thambi Nedunchezhiyan

ளை காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் திரு ந.வித்தியாதரனிடம் பகிர்ந்திருந்தார்   
அதில் இருந்து சில பகுதிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
எனக்கு இப்போது வயது 95 . அந்த தலைமுறையில் தந்தை செல்வா , வன்னியசிங்கம். ராஜவரோதயம் போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகியவர்களில் நான் மட்டும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
எஸ் டி சிவநாயகம் அண்ணன் குறித்து நினைவுகளை மீட்க எனக்கும் பல விடயங்கள் உண்டு.  


ஆனால் என் வயது மூப்பு காரணமாக என்னால் பல விடயங்களை எழுதி அனுப்ப இயலவில்லை . உங்களுடன் பேச்சில் பரிமாறிக்கொள்கிறேன்.
எனக்கு சிறுவயதில் இருந்தே சிவநாயகம் அண்ணனை நன்கு தெரியும்
அவரை அண்ணன் என்றே அழைப்பேன்
என்னை வழிப்படுத்திய நெறிப்படுத்திய வழிகாட்டி அவர்தான்.
மட்டக்களப்பு பகுத்தறிவு கழகத்தை அவர் ஆரம்பித்த போது அதில் என்னை இணைத்து கொண்டார்
கழகத்தின் அச்சாணி அவர்தான் . அவரை சுற்றி நாங்கள் வலம் வந்தோம்.
 மட்டக்களப்பு இளைஞர்களிடையே சுயமரியாதை  பண்பை அவர் நிலை நிறுத்தினார்
பகுத்தறிவு கழகம் மூலம் சமூகத்தை நெறிப்படுத்தும் உயரிய பணியை முன்னெடுத்தார்.

 அவர் சுதந்திரனில் இணைந்த போது என்னையும் சேர்த்து வைத்துக்கொண்டார்.
அதன் மூலம் தமிழரசின் உணர்வை எங்கள் இரத்தத்தில் பாய்ச்சினார். அவரால் தமிழரசு வளர்ந்தது . நாமும் வளர்ந்தோம்
என்னுடைய அரசியல் திறமையை நான் அறியுமுன்னேரே இனம் கண்டவர் அண்ணன்தான்
 அவர்தான் என்னை அரசியலுக்குள் நுழைத்தவர்

அவர் சிறந்த பேச்சாளர் . நான் பிற்காலத்தில் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்
ஆனால் தமிழ் என்னிடம் சொல்லாட்சி உரையாற்றும் திறன் இருப்பதாக முதலில்  அடையாளம் கண்டு அந்த திசையில் நான் வளம்பெற - மேம்பட ஊக்குவித்து பாடம் போல அதை போதித்து நெறிப்படுத்தியவர் சிவநாயகம் அண்ணன்

கொழும்பில் சுதந்திரனில் இருப்பதோ வடக்கில் அரசியல் செய்வதோ நான் அரசியலில் பணியாற்றுவதற்கு உரிய தளம் அல்ல என்று அன்றே கண்டுகொண்டு என்னை மட்டக்களப்பு களத்துக்கு சென்று அங்கிருந்து அரசியல் செய்ய வழிப்படுத்தி தூண்டியவர் அவர்தான்
அதையும் அவர் நெறிப்படுத்தினார்

எனது பேச்சு செயல் திறமைகளை வைத்து மட்டக்களப்பில் - கிழக்கில் - தமிழரசை நிலை நிறுத்த அவர் பெரிதும் உழைத்தார்
எனக்கு பக்கபலமாக - காவலன் போல்- தனது ஊடக நண்பனான  இரா.பத்மநாதனையும் கூடவே அனுப்பி வைத்தார்

நான் இப்போது அதிகம் அரசியல் பேச விரும்பவில்லை.
நாங்கள்தான் தமிழரசை ( தமிழரசு கட்சியை) வடக்கு கிழக்கில் நிலை நிறுத்தினோம். சாதாரண  ஓரளவு படித்த மனிதர்களாகிய நாம் அதனை செவ்வனே முன்னெடுத்தோம்

 முன்னால் வந்த காதை பின்னால் வந்த கொம்பு மறைப்பது போல,
சிவநாயகம் அண்ணனின் ஆசீர்வாதம் உதவியுடன் பின்னாட்களில் கட்சிக்குள் நுழைந்த  மெத்த படித்தவர்கள் - கருப்பு அங்கி அணிந்தவர்கள்  எங்கள் முதுகில் குத்திய போது எனக்கு அந்த சமயத்தில் பக்கபலமாக நின்றவர் அண்ணன் சிவநாயகம்தான்

அதன் பின்னால் நடந்தவை எல்லாம்   மக்களுக்கு தெரியும்.
 அந்த சமயத்தில் எனக்கு பக்கபலமாக நின்றவர் . தெம்பு தந்தவர் சிவநாயகம் அண்ணன் மட்டுமே.
 அவரே பின்னர் மாற்று வழியில் நான் அரசியல் தொடர்வதற்கும் என் மக்களுக்கு பணியாற்றுவதற்கும் பலமாக நிற்பதற்குமான வழியை  ஏற்படுத்தி கொடுத்தவர்.

முதல் படத்தில் இடமிருந்து வளமாக ஆர் எம் வீரப்பன், செல்லையா ராசதுரை,  எஸ் டி சிவநாயகம்
இரண்டாவது படத்தில் இடமிருந்து வளமாக எஸ் டி சிவநாயகம், இ தி மு க  மணவை தம்பி,  இரா நெடுஞ்செழியயன்


கருத்துகள் இல்லை: