இவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அங்கு பிரதமராக இருந்தார்
அந்த காலக்கட்டங்களில் இவர் தமிழ்நாட்டோடு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற ஆவலோடு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருந்தார்
தமிழ் நாட்டோடு கல்வி பொருளாதார கலாசார மொழி தொடர்புகளை பேணுவதற்கு கயானா நாட்டு தமிழ் பிரதமர் வீராசாமி நாகமுத்து அவர்கள் கோரிக்கை விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன .
இந்த வாய்ப்பை பயன்படுத்த இதுவரை யாரும் பெரிதாக முயற்சி செய்ததாக தெரியவில்லை.
அப்போது அமைச்சர் சம்பத் மற்றும் அமைச்சர் வீரமணி ஆகியோரோடு கயானா நாட்டு பிரதமர் திரு வீராசாமி நாகமுத்து அவர்கள் பேசி இருக்கிறார்
தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் கயானா அரசிடம் இருந்து பெற்று தருவதாக தமிழக அரசுக்கு அழைப்பு விடுத்திருந்தார்
எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பும் பொருளாதார அபிவிருத்தியும் தமிழும் தமிழ் கலாச்சார பரிவர்த்தனைக்கு ஒரு அரிய வாய்ப்பாக கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை அதிமுக அரசு நழுவ விட்டுவிட்டது
எங்கே கொள்ளை அடிக்கலாம் என்று மட்டுமே சிந்தித்து செயலாற்றும் அதிமுக அரசு இழந்த ஒரு அரிய வாய்ப்பாக இதை கருதுகிறேன்
தென் அமெரிக்காவில் உள்ள ஒரே ஒரு ஆங்கில நாடு இதுதான் ..
நல்ல மருத்துவ பல்கலை கழகம் இருக்கிறது .. கற்கலாம்
அவரின் கோரிக்கையை அதிமுக அரசு கண்டு கொள்ளாத நிலையில் ஒரு காணொளி வாயிலாகவும் இதை தெரியப்படுத்தினார் அந்த காணொளிதான் இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக