செவ்வாய், 23 மார்ச், 2021

சீமானின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி! ஆண்டு வருவாய் கணக்கில் குளறுபடி

சீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு

tamil.samayam.comசீமானின் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ள அரசியல் கட்சிகள், வேட்பாளார்கள் பட்டியலையும் அறிவித்துள்ளன.
இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான பரிசீலனையை முடித்த தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வேட்புமனுவை சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்பு மனுவில், சீமான் தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.


அதில், தனக்கு அசையும் சொத்தாக ரூ.31,06,500 லட்சம் உள்ளதாகவும் அசையா சொத்து எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருடைய மனைவிக்கு அசையும் சொத்தாக ரூ.63,25,031 லட்சமும், அசையா சொத்தாக ரூ.25,30,000 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் காட்டிய வருவாய் மிகவும் குறைவாக இருந்ததால் சர்ச்சை எழுந்தது.
குறிப்பாக, 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் ரூ.1000 மட்டுமே எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இது தவறுதலாக அச்சுப்பிழை காரணமாக குறிப்பிடப்பட்டு விட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், இதர ஆண்டுகளில் அவரது வருவாய் குறைவாக இருந்தது சமூக வலைதளங்களில் விவாதத்துக்குள்ளானது.
இந்த நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: