செவ்வாய், 23 மார்ச், 2021

நக்கீரன் கருத்து கணிப்பு பாஜகவுக்கு 20 சீட்" ஜாஸ்தி.. அதிமுகவுக்கு ஆபத்து.. பாஜகவால் வீழ்ச்சி..

Black வடிவு (@uthira_) | Twitter

Hemavandhana - /tamil.oneindia.com சென்னை: ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்ட பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நக்கீரன் ஒரு சர்வே எடுத்து முடிவை வெளியிட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் நக்கீரன் எடுக்கும் சர்வேக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்..
காரணம், அவற்றில் கூறப்படுவது பெரும்பாலும் நடக்கும் என்பதால்தான்.. அந்த வகையில் தற்போதும் ஒரு சர்வே முடிவை எடுத்து வெளியிட்டுள்ளது
நக்கீரன். இதுதொடர்பாக நக்கீரன் கூறியுள்ளதாவது: "இம்முறை அதிமுக தொண்டர்களை மையப்படுத்தி தமிழகம் தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
பொதுமக்களின் கருத்துகளையும் புறக்கணிக்கவில்லை. இந்த சர்வேயின்போது டெல்டா மாவட்டத்தில் கோப அனல் வீசியது.
வெறுப்பு "நான் அதிமுகவின் ஆதரவாளன். ஆனாலும் எனக்கு ஜெயலலிதா மீது சில வெறுப்புகள் உண்டு. அதே நேரத்தில் அவரது சமுதாயத்தினரை ஆடாமல் அடக்கி வைத்திருந்தார். ஆனால் இன்று சங்கரமடத்தின் கூடாரம் முதல் குடுமி வரை ஆடுகிறது. அதற்கு வழிவிட்டுவிட்டார் எடப்பாடி'' என கொக்கரிக்கிறார்கள் மடாலயங்களுக்கும் கோவில்களுக்கும் பெயர்பெற்ற கும்பகோணம் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.


தயவு தேவை பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது இவர்கள், அடித்து வைத்திருக்கும் பணத்திற்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்கிற பயத்தினால்தான். அதேபோல சசிகலா அதிமுகவை கைப்பற்றிவிடுவார். அந்த இடையூறு வராமல் இருப்பதற்கு மத்திய ஆட்சியின் தயவு தேவை. இவை அனைத்தும் தங்களுடைய பதவியை தக்கவைப்பதற்குத் தானே தவிர வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை'' என தெளிவாக எச்சரிக்கிறார்கள் அதிமுகவினரும் பொதுமக்களும்.

பிரதமர் மோடி "பாஜகவை ஜெ. நிராகரித்தார். மோடி பிரதமராகவே சென்னை வந்தபோதும் எடப்பாடியைப்போல கூழைக்கும்பிடு போட்டு வரவேற்கவில்லை. பிரச்சாரத்தில் மோடியா? லேடியா? என பாட்ஷா பட ஸ்டைலில் கேள்வி கேட்டார். அந்த ஜெ. நிராகரித்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பது சதி என 23 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள். மோடிக்கு எடப்பாடி பயப்படுவது போல, இந்திராகாந்திக்கு எம்ஜிஆர் பயந்தார். ஆனால் எம்ஜிஆரும் ஜெ.வும் மதவாத சக்திகளை வளரவிடவில்லை. பாஜகவுக்கு 20 சீட் வாரி வழங்கியிருக்கிறார் எடப்பாடி... பாஜக தயவில் ஆட்சி நடத்தியவருக்கு வேற வழியில்லை'' என்கிறார் திருப்பத்தூர் கனகராஜ்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுகவின் வெற்றிக்கு பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு பாதிப்பு வரும் என்று அதிகபட்சம் பேர் அதாவது 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது நிச்சயம் அதிமுகவுக்கு சந்தோஷமான செய்தி அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம். அதேசமயம், வெற்றியைப் பாதிக்காது என்று 37 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேள்வி - பதில் சரி, ஜெயலலிதா நிராகரித்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது சரியா என்ற கேள்விக்கு சரி என்று 23 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிகபட்சமாக 46 சதவீதம் பேர் தவறு என்று கூறியுள்ளனர். 31 சதவீதம் பேர் அதிமுகவுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்று சொல்லியுள்ளனர். அதாவது நிர்ப்பந்தத்தின் பேரில்தான் அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது என்பதே இதன் சாராம்சம் ஆகும்.

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கியிருப்பது குறித்த கேள்விக்கும் சுவாரஸ்யமான பதில் கிடைத்துள்ளது. அதாவது எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு என்று 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது குறைவுதான் என்று 11 சதவீதம் பேர் சொல்லியுள்ளனற். ஆனால் அதிகபட்சமாக 57 சதவீதம் பேர் ஒரே குரலில், 20 தொகுதிகள் ஒதுக்கியது அதிகம் என்று அடித்துக் கூறியுள்ளனர். சேலம் ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த விஜயகுமார், "ஜெ. மறைந்த பிறகு அ.தி.மு.க. நெருக்கடிகளைச் சந்தித்தது. அப்போது பாஜக தயவால்தான் ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. அதனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறில்லை'' என்கிறார்.

அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா, உட்பட பல கட்சிகள் இருக்கிறது. அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் மிரட்டல் தொனியில் பேசமாட்டார்கள். ஆனால் பாஜகவினர் மிரட்டல் தோரணையில்தான் அதிமுகவினரிடம் பேசுகிறார்கள். "மத்தியில் ஆட்சி இருக்கிறது என அதிமுக நிர்வாகிகளை மிரட்டி காரியம் சாதிக்கிறார்கள். அதுபோலத்தான் முதல்வரையும் மிரட்டி, கூட்டணி அமைத்துக்கொண்டு சீட்டுகளையும் கூடுதலாக வாங்கியிருக்கிறார்கள். அந்த சீட்டில் ஒரு சீட்கூட பாஜக வர வாய்ப்பில்லை'' என்கிறார் பள்ளப்பட்டி அதிமுக விசுவாசி ஆறுமுகம்... எப்படியோ, தேர்தல் முடிந்த பிறகுதான் உண்மையான மக்களின் கருத்து தெரிய வரும்... பார்ப்போம்..!

கருத்துகள் இல்லை: