Murugan Sivalingam : · சாஸ்திரி... சிறிமா வதைப்படலம் பழையன நினைத்தல்--6!
சிவலிங்கம் செந்தூரன் இரட்டையர்கள் உருவாக்கிய ஹைலண்ஸ் கல்லூரி அடையாளங்களான சில பிரபல்யங்களை இங்கு பதிவிடுவதுபெருமைக்குரியதாகும்! மு.க.நல்லையா என்ற "சாரல்நாடன்"கல்லூரி காலத்திலேயே தமிழ்..ஆங்கில மொழியில் பேச்சாற்றல் கொண்டவர். கல்லூரி தமிழ்ச்சங்க கையெழுத்துப் பத்திரிகையான "தமிழோசை" யின் ஆசிரியராக செயற்பட்டவர். தொழிலில் தலைமை தேயிலைத் தொழிற்சாலை உத்தியோகத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.தோட்ட சேவையாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர்.கவிதைகள் சிறுகதைகள்.. ஆய்வு கட்டுரைகள் என இலக்கியப் படைப்புக்களைத் தந்தவர் கோதண்டராமன் நடேசய்யர்...கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை...இர.சிவலிங்கம் ஆகியோர் பற்றி வரலாற்று நூல்கள் எழுதியவர். பல இலக்கிய ஆய்வு நூல்களும் எழுதியவர்.மு.சிவலிங்கம் நாடகம் நடித்தல்..மேடைப் பேச்சு என முன்னணியில் இருந்தவர். சாரல்நாடனுக்கு அடுத்து கல்லூரியில் தமிழ்ச்சங்கப் பத்திரிக்கையான தமிழோசைக்கு ஆசிரியராக இருந்தவர் .கதை..கவிதை..கட்டுரை என ஈடுபாடு கொண்டவர். தொழில் ஈடுபாட்டில் பத்திரிக்கையாசிரியர்..பாடசாலை ஆசிரியர்.. என்றும் சமூகப் பணியில் ம.ம.முன்னணியின் பொதுச்செயலாளர்.. மத்திய மாகாண சபை பிரதித் தலைவர் என செயற்பட்டவர். மலையக மக்கள் முன்னணி உருவாக்கத்தில் ஒருவராக இருந்தவர். கல்வி... கலை..இலக்கியம் நாடகம்..சினிமா அரசியல் இவரது துறைகளாகும். சிறுகதைத்தொகுப்புகள்..நெடுங்கதைத் தொகுப்புகள்..மொழி பெயர்ப்புக்கள்..ஆய்வு நூல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக