திங்கள், 18 ஜனவரி, 2021

டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் Farmers Stage 'Rehearsal' Tractor Rally Around Delhi Ahead Of Republic Day Parade


zeenews.india.com :தில்லியில், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் டிராக்டர் பேரணியை நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு, டிராக்டர் பேரணியை தடை செய்ய கோரி தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் (SupremeCourt) , தில்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என போலீஸார் தான் தீர்மானிக்க வேண்டும்,' என கூறியுள்ளது.   பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்த விஷயம் என்பதால், போலீஸார் தான் அது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை (Farm Laws) எதிர்த்து, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன், நடத்திய பல சுற்று பேச்சு வார்த்தையில் சுமுகமான  தீர்வு ஏதும் ஏற்படவில்லை. விவசாயிகள், சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளனர்.

சில நாட்களுக்கு முன், விவசாயிகள் போராட்டம் (Farmers Protest) தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைக்க  உத்தரவிட்டது. மேலும், பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றம் வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு நாளை கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: