இன்றைய இளம் இயக்குநர்கள் அல்லது திரைத்துறைக்கு வரவிருக்கும் நண்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பாலுமகேந்திரா ஒரு இயக்கம் போல தொடர்ந்து செயல்பட்டார். அவர் சினிமாவை தவிர்த்து வேறொன்றையும் சிந்திக்காத முழுக்க சினிமாவிற்கே தன்னை அர்ப்பணித்த மனிதராக இருந்தார்.
எல்லாவற்றையும் விட எல்லாரும் அவரை எளிதில் அனுகலாம். தமிழ்நாட்டில் எந்த மூலைமுக்கில் நீங்கள் சினிமா சார்ந்து இயங்கும் மனிதராக இருந்தாலும் நீஙகள் பாலுமகேந்திராவை அனுகலாம். நீங்கள் இன்னாராக உங்களை நிரூபித்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தார். யார் தொடர்ந்து தன்னை புதுப்பிக்க முடியும் என்றால் அவர் எப்போதும் களத்தில் இயங்கும் இளைஞர்களோடு, அமைப்புகளோடு நல்ல உறவில் தொடர்பில் இருக்க வேண்டும். கலைஞன் என்பவன் கிட்டத்தட்ட மக்கள்பணி செய்யும் களப்பனியாளன் போலவும் தன்னை உருமாற்றிக்கொள்ள வேண்டும். பாகுபாடில்லாமல் எல்லாரையும் அரவணைக்கும் பக்குவம் வேண்டும். அது பாலுமகேந்திராவிடம் இருந்தது.
இன்று பாலுமகேந்திரா பெயரில் விருது, நூலகம், திரைப்பட சங்கம், என பல அமைப்புகள் அவர் பெயரை பறைசாற்றி வருகிறது. ஆனால் மகேந்திரன் ! மகேந்திரன் ஒரு நீர்க்கோழி போல தன்னை பொது வெளியில் இருந்து முற்றிலுமாக துண்டித்துக்கொண்டார். பெரிய அல்லது பொது சமூக புத்தியில் வெற்றிபெற்ற பல அமைப்புகளில் எப்போதாவது தலைகாட்டுவார்.
இறுதி காலத்தில் அவர் நடிக்க தேர்ந்தெடுத்த படங்களே அவர் எந்த அளவிற்கு சினிமாவில் இருந்து அந்நியப்பட்டிருந்தார் என்பதற்கு உதாரணம். தயாரிப்பாளர்களை பார்ப்பதும், உதவி இயக்குநர்களோடு மட்டும் உட்கார்ந்து கதைகள் பேசுவதும், சோ கால்ட் தமிழ் ஹீரோக்களின் கால்ஷீட்டும் மட்டுமே சினிமா எடுக்க போதுமானது என்று யார் நினைத்தாலும் அவர்களை கலை விரைவில் ஓரங்கட்டிவிடும். அல்லது உங்கள் இருத்தல் இல்லாமல் ஆகிவிடும்..
சினிமா என்பதை எப்படி அனுக வேண்டும் என்பதற்கு பாலுமகேந்திரா உதாரணம். இளம் இயக்குநர்கள் அவரது செயல்பாடுகளை பின் தொடர தேவையில்லை. ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். இது பாலுமகேந்திராவின் சீடர்களுக்கும் பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக