Karthikeyan Fastura : · Covid உருவாக்கியுள்ள Behavioral Changes என்ன அலசிவரும்போது புலப்பட்ட சில விஷயங்கள் 1. சினிமா பார்க்க தியேட்டர் செல்வது குறைந்துள்ளது. அடித்தட்டு மக்களுக்கு சினிமா 10 ஆண்டுகளுக்கு முன்பே Luxury Budget ஆக மாறிவிட்டது. Middle Class மக்களுக்கு மாதாந்திர Budgetல் 1000ரூபாய்க்கு OTT சென்றுவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது சரியான முடிவு என்று இந்த கோவிட் காலம் நிரூபித்திருக்கிறது. இனி அவர்கள் சிறுபடங்களுக்கு தியேட்டர் வருவது கடினம். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுக்கவே இது தான் நடந்து வருகிறது. தொழில்நுட்பமும் மிகக்குறைவான விலையில் தரமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.
2. இந்த காலகட்டத்தில் மிக அதிகமாக விற்பனையானது ஸ்மார்ட்போன்கள். இதற்கு பல காரணங்கள். இதன் பக்கவிளைவாக நிறைய Youtube Channels பிறந்திருக்கிறது. அதில் அதிகமாக உருவானவை சமையல். கூகிளிற்கு அடுத்து மக்கள் அதிகம் தேடியது Youtubeல். அதற்கு அடுத்த இடத்தில் Amazon.
3. நிறைய ஆன்லைன் வகுப்புகள் உருவாகியுள்ளது. பல தேவையற்றவை என்றபோதும் மக்கள் ஆர்வம் பலமடங்கு பெருகியுள்ளது. சில ஆன்லைன் வகுப்பறை ஸ்டார்ட்அப்கள் இந்த காலகட்டத்தில் கன்னாபின்னாவென்று வளர்ச்சி கண்டுள்ளது.
5. சிறுதொழில் குறுந்தொழில் ஆகியவற்றில் நிறைய பிசினஸ்கள் கைமாறியுள்ளதை பார்க்கமுடிகிறது. நிறைய மக்களுக்கு தொழில்மீது ஆர்வம் வந்திருக்கிறது. அல்லது வேலை இழப்பினால் தவிர்க்க இயலாமல் வந்திருக்கிறார்கள்.
6. மக்களின் மதம், சடங்குகள் போன்ற இறை நம்பிக்கைகள் வெகுவாக குறைந்திருக்கிறது. எல்லா மதத்திலும் இது ஊர்ஜிதமாகியுள்ளது. கோவில்கள், சர்ச், மசூதி எல்லாம் மீண்டும் திறந்தபின்பும் பண்டிகைகளில் கூட கூட்டம் சேரவில்லை. அதன் பக்கவிளைவாக சாமியார்கள், குருமார்கள், ஜோதிடர்கள், போதகர்கள் ஆகியவர்களின் விற்பனைகள் வெகுவாக குறைந்திருக்கிறது.
7. ஒரு விசித்திரமான மாற்றம் இசைவிற்பனை உலகமெங்கும் குறைந்திருக்கிறது. மக்கள் இசை கேட்பது கூட குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
இன்னும் இருக்கிறது. நாளை பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக