இந்த 1500க்கும் அதிகமான சிங்கள சகோதர மாணவர்கள் எவ்வாறு அள்ளு கொள்ளையாக யாழ் பலகலைக்கழகத்துக்கு தெரிவாகுகிறார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். அதற்கு நாமே முழு பொறுப்பு.
முன்னர் யாழ் பல்கலைகழக “கம்பஸ்” பெடியனாம்”கம்பஸ்” பெட்டயாம் எண்டா இருக்கிற மதிப்பு வேறு. எப்படியாவது கம்பஸ் போயிட்டா சரி. எந்தத்துறை எண்டாலும் கம்பஸ் போனா சரி. அதுதான் யாழ்பாணத்தவர்களின் இலக்கு.
போர் காலங்களில் வடக்கு மாணவர்களுக்கு யாழ் கம்பஸ் தான் கம்பஸ் ,வெளி கம்பஸ் அரிதாகவே அப்பிளிகேசன் பண்ணப்படும்.
வெளியேறும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்புக்களும் இங்கேயே கிடைக்கும் . அப்போது கம்பஸ்ஸில் இருந்த துறைகளும் குறைவென்றபடியால் குறைவான பட்டதாரிகளே வெளியேறினார்கள். அரச வேலையும் கிடைத்தது.
ஆக எத்துறை என்றாலும் யாழ் கம்பஸே தெரிவு ,கனவு.
ஆனால் போர் நிறைவுக்கு பின் இன்று
பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் கால் பதித்ததாலும், பல்வேறு துறைகள் தனியார் துறை கல்வி நிறுவனமூடாக கிடைப்பதாலும் ( அவற்றை குறை கூறவில்லை) புலம்பெயர் தேசங்களில் இருந்து உறவுகள் அதிக பணம் அனுப்புவதாலும்,
இங்கு கல்வி கற்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் கம்பஸ்க்கு
விஞ்ஞான துறை (Biological Science) ,பெளதிக விஞ்ஞானம்( Physical Science) கிடைத்தாலும் அதை அவர்கள் விரும்புவதில்லை. அந்த துறைக்கு ரிஜிஸ்ரர் பண்ணுவதில்லை. ஆக அதற்கு தமிழ் மாணவர்கள் றிஜிஸ்றர் பண்ணாததனால் அந்த இடங்களினை நிரப்ப தெற்கிலிருந்து அதிக மாணவர்கள் குறைந்த வெட்டுபுள்ளியுடன் இங்கு நிரப்பப்படுகிறார்கள்.
இதெல்லாம் ஒரு துறையா ??என்ற நோக்கும், கொழும்பில் சென்று ஏதோ கோர்ஸ் படிக்கலாம் வெளிநாட்டு பணம் இருக்கு என்றதாலும் ,ஏன் இந்த கோர்ஸ் போவான் பணம் செலுத்தி கல்வி பயிலும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் ஏதோ ஒரு கோர்ஸ்னை பயில்வோம் , இல்லை வெளிநாடு போகலாம் என எண்ணுவதன் வெளிப்பாடாகும்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு சிங்கள ,முஸ்லிம் மாணவர்கள் இலகுவாக நிரப்பப்படுகிறார்கள்.
இன்று யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான துறையில் அதிகம் பெரும்பாண்மை இன மாணவர்களே!
அதன் மாணவர் ஒன்றியம் இன்னும் சில வருடங்களில் அவர்கள் வசமாகும். ஏன் அனைத்து பீட மாணவர் ஒன்றியமும் ஓர்நாள் அவர்கள் வசமாகும்.
பிறகு நடப்பவை பற்றி இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமல்ல.
யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடம், விவசாய பீடம், இயந்திரவியல் பீடம் போன்றவற்றிலும் இதே நிலை தான். இனி வெளிவரும் விரிவுரையாளர்கள் கூட அவர்களாகவே இனி அதிகம் இருப்பர்.
ஏன் இன்னொரு தகவல்
யாழ்பாண மாணவர்கள் பலர் கணிதத்துறை எடுத்தாலும் அவர்களுக்கு கிளிநொச்சி இஞ்சினிஜேரிங் கிடைத்தாலும் அவர்கள் கொழும்பு, கண்டி பல்கலை கிடைக்க வேண்டும் என்பதற்காக கிளிநொச்சி(யாழ் பல்கலை) ரெஜிஸ்ரர் பண்ணாமல் திரும்ப ஏ.எல் சோதனை எழுதுவது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆக அந்த பீட வெற்றிடங்களுக்கு தெற்கு மாணவர்கள் நிரப்பபடுகிறார்கள்.
ஏன் பயோ (Bio) மாணவர்கள் சித்த மெடிசின் கிடைத்தால் போக மாட்டார்கள் அந்த வெற்றிடங்களுக்கு சிங்கள ,முஸ்லிம் மாணவர்கள் நிரப்பப்பட்டு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் 1500 மாணவர்கள் சிங்கள மாணவர்கள். முஸ்லிம் சகோதர மாணவர்களினையும் கணக்கிட்டு யாழ்பல்கலை கழகத்தின் மொத்த மாணவர் தொகையில் இருந்து கழித்து கணக்கிட்டால் தமிழ் மாணவர்கள் தொகை தெரியவரும்.
இது நாம் விட்ட தவறா அவர்கள் விட்ட தவறா?
இந்த விடயங்கள் பற்றி உயர்தர பாடசாலைகளும், விரிவுரையாளர்களும் இன்னும் போதிய விளக்கங்கள் ஏற்படுத்துவதாக தெரியவில்லை. சிலர் ஏற்படுத்தினாலும் அது சரியாக சென்றடைவதில்லை.
இப்போது கூறுங்கள் யார் குற்வாளிகள் என்று
ஏன் இன்னுமொன்று
யாழ்பாண ஆசுப்பத்திரிகளில் அதிகமாக தாதியர் சேவையில் சிங்களவர்களே இணைகின்றனர் ஏன்?
நாம் நேர்ஸ் ஆவதா? என்ற யாழ்பாணத்தவர்களின் ஒரு செயற்கை மிதவாத நினைப்பு.
நேர்சிங் படிப்பதற்கு பதில் நாம் பிறைவேற் கோர்ஸ் படிப்போம் என்ற முடிவுகள்.
நேர்சிங் டிப்ளோமாவுக்கு அப்ளை பண்ண முன்னர் பயோ படித்தவர்களே ஏலுமாக இருந்தது எனினும் தாதியர் குறைபாடுகளினால் கணித துறை மாணவர்களையும் உள்ளீர்தார்கள். அதற்கும் அசையவில்லை எம்மவர்கள். பிறகு ஆர்ட்ஸ் படித்தவர்களும் அப்ளை பண்ணலாம் என்றார்கள் அதற்கும் நம் தமிழ் மாணவர்கள் மசியவே இல்லை. இப்போது ஓ .எல் ரிசல்ஸோடு எடுக்கிறார்கள்.
இந்த சீத்துவத்தில் சிங்கள தாதியினர் மருத்துவ சேவைக்காக நியமிக்கபடாமல் என்ன செய்வது. இன்று ஆசுப்பதிரிகளில் அவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.
பிறகு சொல்வது அரசு சிங்களவர்களினை நியமிக்கிறது என்று.
கொஞ்சம் எம்மை நாம் பரிசீலனை செய்யலாமே!
எமது மாணவர்கள் தம் எதிர்கால இவ் பொருளாதாரம் தரும் கோர்ஸ்களை தேர்ந்தெடுக்காமல் தவிர்த்து கண்துடைப்புக்கு ஏதோ ஒரு கோர்ஸ் படிப்பது புலம் பெயர் பணத்தினாலேயாகும். சில புலம்பெயர் உறவுகள் வாயளவில் உரிமை பேசாமல் இவ்விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதை விடுவோம் அடுத்த ஒன்று
அன்று தொடக்கம் இன்று வரை பரம்பரை பரம்பரையாக கொலசிப் பாஸ் பண்ணுற பிள்ளையும், ஓ .எல் 9ஏ எடுக்கிற பிள்ளையும், ஏ .எல் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்களினை ஊடகங்கள் பேட்டி கண்டால் "நான் டொக்டராக வர வேண்டும்" " நான் இஞ்சினியராக வர வேண்டும்" என்ற தாத்தா கால மனப்பாடங்கள் இன்றும் மறையவில்லை.
மாறாக நவீன உலகில் "ஸ்பேஸ் சயன்ஸ்",
"ஏரோ டைனமிக்" ,மைக்கிறோ எஞசினியரிங்" " டி .என் .ஏ எஞ்சினியரிங்" போன்ற துறைகளில் பெரியவனாக வர வேண்டும் என எந்த மாணவரும் இலட்சியமாக கூறுவதில்லை. ஏன் சிறந்த தலைவனாக வர வேண்டும் என்று கூட ஒரு மாணவனும் கூறுவதில்லை. காலம் மாறினாலும் நம் கோலங்கள் மாறவில்லை. பெற்றோர் இதுபற்றி சிதித்து மாணவர்களினை கனவு காண வைப்பதுமில்லை. பழைய சித்தாந்தப்படி மெடிசின்,இஞசினீரிங்,சட்டம் படிப்பிக்கவே பெரும் பண செலவுடன் வெளிநாடு அனுப்புகின்றனர்.
ஏரோ டைனமிக், ஏரோ எஞ்ஞினீரிங் போன்ற துறைகளில் யாரும் பட்டமோ புலமையோ கொள்ளாது பலாலி சர்வதேச விமான நிலையம் வந்த போது அதில் வேலையினை நிரப்ப அத் துறையில் தேர்ந்த சிங்களவர்களினை தானே நிரப்பலாம். பின்னர் சிங்களவர்களினை நிரப்பிவிட்டார்கள் என கூவுவது.
இவை அனைத்தும் வேடிக்கையே!!
எம் பிரதேசத்தில் கண்ணுக்கு தெரிந்தே
சிங்கள பெரும்பாண்மை இன விகிதாசார பரம்பலை பல துறைகளில் நாமே ஏற்படுத்த அனுமதித்துவிட்டு ஐயோ ஆக்கிரமித்துவிட்டானே என கூவுவது அநியாயம்.
வடக்கின் முக்கிய கல்வி துறையிலேயே சிங்களவர்களினை ஊடுறுவ விட்டது யார்? அதனூடாக அதிக வேலை வெற்றிடங்களினை அவர்கள் நிரப்ப காரணமாக அமைந்தது நாமா அவர்களா?
நாம் நீண்ட இன விடுதலை பயணத்தில் நீடித்த கண்ணோட்டங்கள் வகிபங்குகள் வகிக்காது சுயநல யாழ்பாணத்தவர்களாக எப்போது மாறினோமோ அப்போதே சத்தமற்ற இன அழிப்புக்கு நம்மை நாமே உட்படுத்தியிருக்கிறோம்.
இவை கண்னுக்கு புலப்படும் காணி அபகரிப்பு, விகாரை அமைப்பு , நினைவு சின்ன அழிப்பினை விட ஆபத்தானவை.
இப்போது சொல்லுங்கள் யார் இனழிப்பாளர்கள்!!!
இனியாவது சமூக அக்கறையோடு எழுந்து பணியாற்றுங்கள்.
(இது குறைகூறும் பதிவல்ல விழிப்புணர்வு பதிவு)
நன்றி: மதுசுதன்
11.01.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக