ilakkiya .net : இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் நகரத்தப்பட்டுள்ள நியூ டயமன் கப்பலில் மீண்டும் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் தீயினால் எந்த நேரத்திலும் கப்பல் வெடிக்க கூடிய அபாயம் உள்ளதாக, இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் பயணித்த குறித்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் நேற்று மாலை இரண்டாவது முறை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த இந்திய, இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். கப்பல் வெடித்தால் இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் 2000 கிலோ கிராமிற்கும் அதிகமான திரவ வகை ஒன்றை விமான மூலம் வீசி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காக வெளிநாட்டில் இருந்து ஆய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த கப்பலில் 27 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக