ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

அமரர் குட்டிமணியின் மனைவி இராசாரூபராணி இலங்கையில் காலமானார்! ( பிரபாகரன் குட்டிமணியை காட்டிக்கொடுத்த...)

Kumar Sriskandakumar : மணற்காட்டில் எங்களை இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தது ‘தம்பி’( பிரபாகரன்)  என்று, குட்டிமணி பனாகொடை இராணுவ முகாம் எமது முதலாவது சந்திப்பில் என்னிடம் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது! 

Thambiah Pillai Sothilingam :   இவர்களை ஜெயம் என்பவரின் உதவியாலேயே பொலீஸ்க்கு அறிவிக்கபாபட்டது. அங்கே பொலீஸ் கைது செய்யும் போது பிரபாகரன் சிறீசபாவீட்டில் வந்து தாயிடமிருந்து சாப்பிட்டுவிட்டு அவர்கள் வீட்டிலேயே நித்திரை கொண்டார். இந்த செய்தி வந்ததும் சிறீயண்ணா என்னடா செய்து போட்டு வந்து உங்க படுத்திருக்கிறாய் என்று சத்தம்போட பிரபாகரன் எழுந்து போய்விட்டார் அதன் பின்னர் பிரபாகரன் enlf கூட்டத்திலேயே பிரபாகரனை சந்திக்கிறார். சிறீசபா சத்தம்போட்டு அயலில் இருந்த சிறீசபா உறவுகள் ஓடிவந்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்தவர் கனடாவில் வாழ்கிறார்.

 Kula Dhayaa: சோதி, பிரபாகரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது எமது வீட்டில்! சிறீ அண்ணா இந்த விடயத்தை சொன்னவுடன், ஒரு நமட்டு சிரிப்புடன் பிரபாகரன் “ அவங்கள் யாருடன் விளையாடுகிறார்கள், என தெரியவில்லை” என்றார். சிறீ அண்ணா என்னை தனது வீட்டிற்கு சென்று அங்கு நின்ற மற்ற தோழர்களை உடனடியாக. வேறு இடங்களுக்க போகச் சொன்னார். பின்னர் சிறீ அண்ணா, தேவன் இந்தியா பயணித்தார்கள், பந்து அண்ணா, பிரபாகரன், குண்டப்பா, நான் பின்னர் சென்றோம். 1982 வரை பிரபாகரன் ரெலோவுடனேயே இருந்தார். நாகராஜாவை பிரபாகரன் கடத்தியது சம்பந்தமான விடயத்துடன் பிரிந்து சென்றார்.  

 Thambiah Pillai Sothilingam : · இவரை குட்டிமணி அம்மன் என்றே அழைப்பது வழக்கம். அம்மனின் ஆத்மா சாநாதியடைய பிரார்த்திக்கிறேன். தலைவர் சிறீசபாவை கொலைகார சுதன் ரமேஸ்டமிருந்து காப்பாற்றிய சத்தியம் இவர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தளபதி குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை பிரித்தானியாவில் இறையடி சேர்ந்தார்(05-09-2020). ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார். 
அவர்களின் பாரியார் இயற்கை எய்திவிட்டார் என்ற துயர செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம்.

ரெலோ இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் , மற்றும் மக்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் , கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்,



அன்னாரது ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

தளபதி குட்டி மணி பற்றிய சிறு பார்வை:
......................................

ரெலோ தளபதி குட்டிமணி
பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை எனக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த குட்டிமணி, 1981 ஏப்ரல் முதலாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.அவரோடு ஸ்தாபக தலைவர் தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடத்தப்பட்டது.

வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, கைதுசெய்யப்பட்ட குட்டிமணியும் ஜெகன் என்பவரும் பல மாதங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்புமின்றி, சட்டத்தரணிகள் கூட அணுகமுடியாதபடி, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

தடுத்து வைத்திருக்கப்பட்ட போது, சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த சித்திரவதைகள் பற்றிய விவரணங்கள் வழக்கின் சாட்சியப் பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மனிதம் ஓர் அணுவிலேனும் இருக்குமாயினும்கூட இத்தகைய சித்திரவதைகளை இன்னொரு மனிதன் மேல் எந்த மனிதனும் பிரயோகிக்க மாட்டான். அத்தகைய மிகக் கர்ணகொடூரமான சித்திரவதைகளுக்கு குட்டிமணியும் ஜெகனும் முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக அந்தச் சாட்சிப்பதிவுகள் தெரிவிக்கின்றன.

குட்டிமணி மற்றும் ஜெகனுக்கு எதிரான கொழும்பு உயர்நீதிமன்றில் நடந்த வழக்கில் 1982 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டபின், மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட முன்பதாக, குட்டிமணி ஏதேனும் தெரிவிக்க நீதிபதியினால் தரப்பட்ட வாய்ப்பில் குட்டிமணி தெரிவித்த விடயமானது, தமிழ் இளைஞர் மத்தியில் நீண்ட தாக்கம் செலுத்தியதொரு கூற்றாக அமைந்து.

தன்னுடைய கூற்றிலே குட்டிமணி “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டு, நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.

இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.

நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்னுடைய கண்கள், கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நிதர்சனமாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: