சனி, 17 நவம்பர், 2018

அந்த 18 எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் உள்ளிட்டவற்றை வாரி வழங்கிய சசி தினகரன் குழு

குஷியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்!மின்னம்பலம் : கடந்த ஓராண்டுக்கு மேலாக சம்பளம் பெறாமல் இருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், கிம்பளம் உட்பட அனைத்து சேர்த்து கவனிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குஷியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை, சபாநாயகர் தனபால் 2017 செப்டம்பர் 18ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால், கடந்த 14 மாதமாகச் சம்பளம், கிம்பளம் கிடைக்காமல் இருந்த அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அதிருப்தியின் உச்சத்திற்கே அவர்கள் சென்றுள்ளார்.

டிடிவி தினகரன் அவர்களை சமாதானப்படுத்தி வந்திருக்கிறார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை கடந்த நவம்பர் 9ஆம் தேதி தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர். தங்களின் மனக்குமுறலை சசிகலாவிடம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு ஆதரவாக இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பக்கம் போய்விடாமல் இருக்க, இதுவரை இழந்திருக்கும் சம்பளத் தொகை, தொகுதி அலோவனஸ், இதுவரையில் அவர்கள் இழந்திருக்கும் கிம்பளம் அனைத்தும் கணக்கு போட்டு அவர்களைக் கவனிக்கும்படி தினகரனிடம் சசிகலா சொல்லியுள்ளார்.
அதன்படி, 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் 14 மாத சம்பளம் உள்ளிட்ட இதர தொகைகள் செட்டில் செய்யப்பட்டுள்ளதாம்.

கருத்துகள் இல்லை: