
உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்
செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ...
பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II)
அதாவது, தமிழிசை தனது இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் காட்ட விரும்பவில்லை படம் காட்ட விரும்பவில்லை உங்களிடம் இருந்து அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே என்றும் நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? என கேட்டு தமிழிசையின் தொலைபேசி எண் மற்றும் இமெயில் ஐடி உள்ளிட்ட பிற தகவல்களை மக்கள் நீதி மய்யம் கறுப்பு மையால் அழித்துள்ளது.
பழைய முதலாளிகளின் கோபம் அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரியை பூசியிருக்கிறோம் என்றும் உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்திற்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக