

ஸ்ரேயாவுக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோசேவுக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியாயின. இவர்களது திருமணம் இந்து முறைப்படி மார்ச் 17, 18, 19 ஆகிய மூன்று தினங்கள் உதய்பூரில் நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஸ்ரேயா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர்களின் திருமணம் ரகசியமாக நடந்துவிட்டதாக 'மிட்-டே' வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. அதில், “கடந்த 12ஆம் தேதி மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஸ்ரேயா வீட்டிற்கு எதிரில் இருப்பவர்களான இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் அவரது மனைவி ஷபானா ஆகியோர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இதை ஸ்ரேயாவுக்கு நெருங்கிய உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இது குறித்தான அறிவிப்பை ஸ்ரேயா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக