புதன், 14 மார்ச், 2018

மாறன் சகோதர்கள் விடுவிப்பு 323 திருட்டு தொலைபேசி இணைப்புக்கள் வழக்கில் ....

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!
பிஎஸ்என்எல் 323 residential lines were allegedly in the name of BSNL General Manager connecting the Boat House residence of Maran with the office of Sun TV through a dedicated underground cable during his tenure as Telecom Minister. 
பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!" பேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரை விடுவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2004-2007ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகத் தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் இந்த இணைப்புகளை சன் டிவிக்குப் பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் பிரம்ம நாதன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என 7 பேரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எனினும், இந்த மனு மீது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கூடாது என சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் தெரிவித்தார். அதன்படி, இன்று (மார்ச் 4) பிற்பகல் 2.30க்கு இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. வழக்கிலிருந்து தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்த நீதிபதி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.
நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘ இந்த வழக்கில் தயாநிதிமாறன் மோசடி செய்ய வேண்டுமென்கிற உள்நோக்கத்துடன் பிஎஸ்என்எல் இணைப்புகளை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ நிரூபிக்கவில்லை. கலாநிதிமாறன் சன் குழுமத்தின் தலைவர் என்ற காரணத்திற்காக அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கும் அடிப்படை ஆதாரமில்லை.
சன் குழுமத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்காத நிலையில், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களை இந்த வழக்கி்ல் சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல. அதேபோல பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. எனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தேவையான சான்றாவணங்கள் சிடி வடிவி்ல் உள்ளது. அந்த சிடி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடைசி வரையிலும் அந்த சிடி ஆதாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சிபிஐ தனது குற்றச்சாட்டை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டதால் இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பு தொடர்பாக தயாநிதி மாறன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “ நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று ஆரம்பம் முதலேயே கூறிவந்தோம். அரசியல் உள்நோக்கம் காரணமாகவும் தொழில் போட்டி காரணமாகவும் இந்த வழக்கு வேண்டுமென்றே புனையப்பட்டது. தற்போது, நீதி வென்றது” என்று கூறியுள்ளார்.
அதேவேளையில், “ நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். உத்தரவு கிடைத்தபின் அதனை ஆராய்ந்து, இந்த விஷயத்தில் சரியான சட்டப்பூர்வ தீர்வைப் பெறுவோம்” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: