Mayura Akilan":லண்டன்:
லண்டனில் மினி பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 8 பேர்
உயிரிழந்துள்ளனர். இதில், 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், இருவர்
கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 3 பேர்
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் என்றும், மூவர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள்
என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் மனோரஞ்சிதம் லண்டனில் பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக பன்னீர்செல்வமும், அவருடைய மனைவி வள்ளி, தங்கை தமிழ்மணி உட்பட 4 பேர் லண்டன் சென்றனர். அங்கிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்வதற்காக மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பன்னீர்செல்வம், வள்ளி, தமிழ்மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் 10க்கும் மேற்பட்டவர்கள் அந்த மினி பேருந்தில் பயணம் செய்தனர். இதில் காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்திருக்கிறார்கள். இதில் கும்பகோணத்தைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மினி பேருந்தை ஓட்டிய கேரளாவை சேர்ந்த இளைஞரும் உயிரிழந்தார். விபத்தை அடுத்து, காயமடைந்த 4 பேரை மீட்டு, பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து 2 கன்டெய்னர் லாரிகளின் ஓட்டுநர்களை லண்டன் போலீஸார் கைது செய்தனர். இதில், ஒருவர் மதுபோதையில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம், என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளனtamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக