ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

மைக்ரோ வேவ் .. உணவில் உள்ள உயிர்ச்சத்துக்களை அழிக்ககூடிய அளவு கதிரியக்கம்!

மின்னம்பலம் :அமெரிக்காவில் மைக்ரோவேவ் உணவுகள் ஆரோக்கியமானவையா? என ஆய்வு நடத்தப்பட்டது. மைக்ரோவேவ் சமையல்முறையில் கதிரியக்கத்தின் அளவு அதிகமிருப்பதால் உணவில் உள்ள உயிர்ச்சத்துகளை கிடைக்காமல் செய்துவிடுகிறது என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. வழக்கமான முறையில் கொதிக்க வைத்த சுடுநீரையும்,மைக்ரோவேவில் சுட வைக்கப்பட்ட நீரையும் அருகருகே உள்ள இருவேறு செடிகளுக்கு ஊற்றி சோதனை செய்யப்பட்டது. அதில் சாதாரண முறையில் கொதிக்க வைக்கப்பட்ட நீர் ஊற்றிய செடி சில நாட்கள் கழித்து வளர ஆரம்பித்தது. மைக்ரோவேவில் கொதிக்க வைக்கப்பட்ட நீர் ஊற்றிய செடி சில நாட்களிலேயே பட்டுப் போக ஆரம்பித்தது. அந்த நீரில் எந்த சத்துக்களும் இல்லாதாதே அதற்குக் காரணம். மேலும் தற்போது மைக்ரோவேவ் பாப்கார்ன் என்பது பிரபலமாக உள்ளது. ரெடிமேட் பாப்கார்னை வாங்கி பாக்கெட்டோடு உள்ளே போடுவார்கள் சில நிமிடங்களில் அந்த பாக்கெட்டை திறந்து பார்த்தால் பாப்கார்ன் தயாராகி இருக்கும். இவ்வளவு விரைவாக செய்த பாப்கார்னை சாப்பிடுவது உடல்நலத்தைக் கெடுக்கும். சில மாதங்களுக்குமுன் தயார் செய்து வைத்திருக்கும் உணவை சில நிமிடங்களில் சமைத்துச் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்னை இதிலும் ஏற்படும். மேலும் கெட்ட கொழுப்புகளை உருவாக்கி, ஜீரண மண்டலத்தையும் பாதிக்கும்.
ஃப்ரோசன் புட்ஸ் என்ற பெயரில் ஃப்ரீசரில் வைத்து வரும் ரெடிமேட் உணவுகளும் இத்தகைய விளைவுகளையே ஏற்படுத்தும். இதையும் மைக்ரோவேவில் மூன்று நிமிடங்கள் வைத்தால் தயாராகிவிடும்.
மேலேயிருக்கும் ஃபாயில் பேப்பரைப் பிரித்தால் உள்ளேயிருக்கும் உணவு சாப்பிடத் தயாராகி இருக்கும். சமைக்க சோம்பல்படுபவர்கள்தான் இத்தகைய உடனடி உணவுகளை வாங்கி மைக்ரோவேவில் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இந்த சோம்பலை விட்டு இயற்கையான முறையில் உணவுகளை சமைத்துச் சாப்பிடுவது மட்டும்தான் உடலுக்கு நலம் பயக்கும். இன்று இயற்கையான விவசாய நிலங்களில் உள்ள மண்ணிலேயே தாதுக்களின் அளவு குறைந்துவிட்டது. காய்கறிகள் முழுச் சத்தோடு கிடைப்பதில்லை. உண்மை நிலை இப்படியிருக்க, உடனடி உணவுகளை சாப்பிடுவதால் ஒரு பயனும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.
மைக்ரோவேவ் உணவை சூடு பண்ண தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலையில் உணவை தயார் செய்திருந்தால் அன்று இரவுக்குள் சூடு பண்ணி சாப்பிட்டுவிடுவது நல்லது. நூடுல்ஸ். புட்டிங், பாஸ்தா, முட்டை மசாலா என சில ஐட்டங்கள் மட்டும்தான் மைக்ரோவேவில் செய்து சாப்பிடுவது நல்லது. இயற்கையான முறையில் சமைத்துச் சாப்பிடுவதுதான் முழுமையான பலனைத் தரும்

கருத்துகள் இல்லை: