வியாழன், 23 பிப்ரவரி, 2017

முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல. ஜக்கி வாசுதேவையே.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் என்பது இன்றிலிருந்து 5000ம் வருடங்களுக்கு முந்தையது. அதாவது பார்ப்பனியப் படையெடுப்புக்கு முந்தையது. பார்ப்பனியப் படையெடுப்பு கிமு 1க்கும் கிபி 1க்கும் இடைப்பட்டதே. சிவன் தான் அந்த மக்கள் வழிபட்ட தெய்வம் என்பது ஆய்வாளர் ஜான் மார்சல் கருத்து. பார்ப்பனிய இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு அது உருவாக்கியதே மும்மூர்த்தி கொள்கை. இந்த மும்மூர்த்திக் கொள்கைப்படி பிரம்மா படைப்பவராகவும், விஷ்ணு காப்பவராகவும், சிவன் அழிப்பவராகவும் முன்னிறுத்தப்பட்டனர். படைத்தல் காத்தல் போன்ற நல்ல வேலை அவர்களுக்கு. அழித்தல் மட்டும் சிவனுக்கு.
மொகஞ்சதாரோ, ஹரப்பா மக்கள் உருவாக்கிய அணையை உடைத்தே பார்ப்பனியம் அழித்தது என்பது ஆய்வு முடிவு. பார்ப்பனிய சம்பிரதாயங்கள் படி வருண பகவானைத் தடுக்ககூடாது என்பதையும் கவனத்தில் கொள்க.
வடநாட்டு சிவனை அழிப்பவராக மட்டுமே முன்னிறுத்திய பார்ப்பனிய அரசியலுக்கு எதிராக உருவானதே தென்னாட்டு சைவ மரபு. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதிலிருந்து வடநாட்டு சிவனோடு தென்னாட்டவருக்கு தொடர்பில்லை.

வடநாட்டு சிவனை யாரும் அங்கு தொட்டு வழிபடலாம். அதற்கு தீண்டாமை இல்லை என்று அர்த்தமல்ல. அங்கு சிவனே தீண்டப்படாதவர் தான். வடநாட்டு சிவனுக்கு அழித்தல் மட்டுமே வேலையாக பார்ப்பனியம் நிச்சயித்தது. ஆனால், தென்னாட்டு சிவன் ஐந்து வேலைகளைச் செய்வதாக நம்புவது சைவ மரபு.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவையே அந்த ஐந்தொழில்.
இந்த ஐந்தை மையமாக வைத்தே சிதம்பரம் நடராஜர் உருவம் இருக்கும். அவர் தென் மேற்கே பார்த்து தான் ஆடுவார். ஏனெனில், பொதிகை மலைக்காற்றை சுவாசித்து ஆடுவதாக ஐதீகம்.
நடனத்தின் அரசனாக சிவனை பாவிப்பதும் தென்னாட்டில் மட்டுமே. தென்னாடு என்பது தமிழ்நாடு மட்டுமே. சக்கி வாசுதேவ் தமிழனோ, தென்னாட்டு சைவனோ அல்ல. வடநாட்டு சிவனை ருத்ரனாகப் பார்க்கும் தெலுங்கைப்  பூர்விகமாகக் கொண்ட கன்னடனே. அவன் சிவனைப் பற்றி புரிந்ததும் தவறே.
சிவன் வடக்கே கெட்டதை மட்டுமே அழிப்பவர். இவன் இங்கு நல்ல பலதையும் சிவன் பெயரைச் சொல்லி அழிப்பவனே. இங்குள்ள முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல. ஜக்கி வாசுதேவையே.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை யார் எழுதினார்கள் என தெரியவில்லை.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: