சனி, 25 பிப்ரவரி, 2017

ரீ ரிகார்டிங் இல்லாம பார்த்தால் ஜாக்கியின் யோகா வெறும் பினாத்தல்? ஜாக்கியின் பின்னணி இசை!

கன்னடன் :வீரப்பன் தமிழ்நாட்டின் வீர அப்பன்
Thozhi Malar< ஈஷா..: எளிய கேள்வி.. எதற்கு இந்த ஆடம்பரம்? இவ்வளவு
விளம்பரம்? உண்மை எப்போதும் இப்படியான விளம்பரம் ஆடம்பரம் சூடி வராது.. இவர்கள் அமைப்பே தவறானது என்று அப்பட்டமாக எனக்குத்தெரிகிறது.. இது வெறும் கேள்வி ஞானம் கிடையாது நானே ஈஷாவில் தங்கி பயிற்சி பெற்றிருக்கிறேன்.. அந்த சூழல் என்னை யோசிக்க விடாமல் அப்படிதான் ஈர்த்தது.. யோசித்தால்.. காட்டின் அமைதி ஈர்க்கத்தான் செய்யும் அதற்கு எந்த புறஊக்கமும் தேவையேஇல்லை என்பது தெரியும்.. ஜக்கி மிகச்சிறந்த உளவியல் நிபுணர்.. இது இத்தனை வருடங்களில் அவருக்கு கைகூடி இருக்கிறது.. அவரின் சத்சங்கங்களுக்கு சென்றவர்களுக்கு தெரியும்.. தியானத்தின் போது வினோத ஒலிகள் அவர் எழுப்புவதும் திடீரென்று கை சொடுக்கல் கை தட்டல்.. கைகளை தேய்க்கும் போது வரும் சப்தம் கழுத்தில் அணிந்திருக்கும் ருத்ராட்ச மாலைகளின் மோதல் சப்தம்.. எல்லாம் பெரிய பெரிய ஸ்பீக்கர்ல அந்த அமைதியான சூழலில் திடீர் திடீர் என்று கேட்கும்.. இது கவனத்தை சிதறவிடாமல் அந்த ஒலிகளின் மீது நம் கவனத்தை குவியவைக்கும்..
அங்கிருந்து தோல் கருவிகள்(டிரம்ஸ்) கொண்டு இசைக்கப்படும் இசை மெதுவாக துவங்கும் அதோட பீட் கொஞ்சம் கொஞ்சமா ஏத்தி வெறித்தனமா உச்சத்துல இருக்கும் போது பட்டென்று அந்த இசை நின்று மெல்லிய புல்லாங்குழல்.. / வேகமாக ஓடி சட்டென்று நிற்க முடியுமா? அப்போது தடுமாறுவோம் அல்லவா அதுவே மனதிற்கும் ஒரு ஆக்ரோஷ இசையை கேட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென மெல்லிய இசைக்கு மாறும் போது மனத்தால் ஏற்க முடியாமல் திணறி அம்மெல்லிய இசைக்கு மயங்கி கண்ணில் நீர் வரும்.. அங்கு ஜக்கி தன் அடிக்குரலில் பாட ஆரம்பிப்பார் ஒரு ஒப்பாரி ராகம் போல.. கேட்கவா வேண்டும் நம் மக்களுக்கு ஓவென்று அழ ஆரம்பித்து விடுவார்கள் தங்களுக்கு தியானம் கை கூடிவிட்டதாக சத்குருவின் ஆசி கிடைத்துவிட்டதாக எண்ணி திளைப்பார்கள். நானும் அப்படிதான் இருந்தேன்.. அடிக்கடி சத்சங்கம் செல்ல செல்ல.. எப்போது இவர் கை சொடுக்குவார் வினோத ஒலிகள் எழுப்புவார் என்று என்னால் கணிக்க முடிந்துவிட்டது.. கவனிக்க ஆரம்பித்துவிட்டேன்... இது இதனால் இதனால் இது என்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தொடர்பு இருப்பது வரிசை கட்டி வந்து என் முன் நின்றது... தியானம் என்பது தானாக கைகூடப்படவேண்டிய ஒன்று அதை இப்படியான வழிகளில் திணிப்பது வன்முறை.. / இளையராஜா இசையமைத்த படத்தில் இசையை மட்டும் தவிர்த்து விட்டுப்பார்த்தால் எப்படி படம்வெளங்காதோ.. அதே மாதிரி ஈஷால அந்த டிரம்ஸ் மைக்செட் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துட்டா போதும்.. ஈஷா அம்மஞ்சல்லிக்கு பெறாம போயிடும். :) /
பிகு : அவர்கள் செய்யும் பூஜை புனஸ்காரம் யோகா கற்றுக்கொடுக்கும் முறை, எல்லாவற்றையும் அவதானித்து சொல்கிறேன் அவிங்க ஃபிராடுதான்.. கொஞ்சம் பகுத்தறிய தெரிந்திருந்தாலே இந்த உண்மை தெரிந்துவிடும் ஆனால் விரும்பி ஏமாற விளைபவர்களிடம் விளக்கி வீண் நேரவிரயம்.
// அவர்கள் கற்றுக்கொடுக்கும் யோகாவில் குறை இல்லை ஏனென்றால் அவையெல்லாம் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் முறைகள் தான். யோகா கத்துக்கணும்ன்னா யோகா டீச்சர்ட்ட போங்க சாமியார்ட்ட போகாதிங்க.
நீடூழி வாழ்க   முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: