வங்கதேசத்தின் வடபகுதியில் இந்துக்குகள் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்துள்ளன.
திருவிழா நடைபெற்ற இடம்
இதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் வடக்கேயுள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் நடைபெறும் மதத் திருவிழா காலத்தில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளன.
இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பில், ஐவர் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றாலும் யாரும் கைது செய்யப்படவில்லை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் சுமார் 10 சதவீதம் உள்ளனர்.
அண்மைக் காலத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மை ஷியாப் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள், மதச்சார்பற்றவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது இஸ்லாமியவாதிகள் தொடர்ச்சியாக கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக