ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல்
சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும் இடையிலும் சண்டை
நடைபெற்று வருகிறது.
இதனால் ரஷ்யா சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு
எதிராகவும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று கிளர்ச்சியாளர்கள்
கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய
நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் விமான தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது
40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
ரஷ்ய விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் தப்பதித்த
விமானியை பிடித்து சுட்டுக்கொன்றது சிரியாவின் கிளர்ச்சிப்படை. அதன்பிறகு
ரஷ்யா தாக்கிய முதல் விமான தாக்குதல் இதுவாகும்.<
சமீபத்தில் ரஷ்யா பயணிகள் விமானம் மற்றும் ஜெட் விமானத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக