கடலூர்: தொடர்ந்து பெய்து வரும் மழையால்
கடலூர் மாவட்டம் பாதிப்பை மீடியாக்கள் பெரும் அளவில் கவரேஜ் செய்யவில்லை என்றே சொல்லலாம். தலைநகர் சென்னை பாதிக்கப்பட்டதால் கடலூரில் என்ன பாதிப்பு என்று விவரம் அதிகம் வெளியே வரவில்லை. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், கடலூரை நோக்கி அணி வகுத்து சென்று கொண்டிருக்கின்றன . சமீபத்திய மழையில் ஒரு லட்சம் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து நீர் நிலைகள் வழிந்து பெருக்கெடுத்து ஓடியது. பரவனாறு, செங்கால் ஓடை, கெடிலம் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டதால் மாவட்டமே வெள்ளக்காடானது. >கனமழை, வெள்ளப் பெருக்கில் இதுவரை மாவட்டத்தில் 86 பேர் இறந்துள்ளனர். 40 ஆயிரம் வீடுகள் முழுமையாகவும் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் பகுதி சேதமடைந்தன. 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 2.5 லட்சம் ெஹக்டேர் நிலங்களில் இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
காட்டாற்று வெள்ளத்தால் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்த 65 ஆயிரம் பேர் 100 தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி முதல் நேற்று காலை வரை 232.83 மி.மீ., மழை கொட்டியுள்ளது. டிசம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி அளவைவிட 62 மி.மீ., கூடுதலாக பெய்துள்ள நிலையில் இன்றும் மழை தொடர்ந்து பெய்தது. ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வரும் கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கடலூரை நோக்கி குவிந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதுதவிர பொதுமக்களும் பல்வேறு இடங்களில் உணவுகளை தயாரித்து வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர்.
ஆளுங்கட்சியினர் அரசியல் : இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வரும் தன்னார்வாளர்களை, அந்தந்த பகுதி ஆளும் கட்சியினர் தடுத்து நிறுத்தி தாங்கள் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக