வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா(வயது 70). வங்காளதேச தேசியவாத
கட்சியின் தலைவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் மீது பல
ஊழல் வழக்குகள் உள்ளன.
இவர் பிரதமராக இருந்தபோது ஒரு கனடா கம்பெனிக்கு எரிவாயு வயலை குத்தகைக்கு
விட்டதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு
காண்டிராக்ட் விட்ட வகையில் நாட்டுக்கு ரூ.13,777 கோடி இழப்பு ஏற்பட்டதாக
புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்
கலிதா ஜியா வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த கோர்ட்டு மனுவை
தள்ளுபடி செய்தது. மேலும் கோர்ட்டு உத்தரவு கிடைத்த 2 மாதத்திற்குள்
கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து இன்று அவர் டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து வரும் டிசம்பர் 28 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று கூறிய நீதிபதி, அன்றைய தினம் கலிதா ஜியா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து வரும் டிசம்பர் 28 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று கூறிய நீதிபதி, அன்றைய தினம் கலிதா ஜியா ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக