வியாழன், 3 டிசம்பர், 2015

மந்திரிகள் கூனி குறுகி கூழை கும்பிடு போடுவது...ஒன்றேதான் இதுவரை நடந்தது......

வானத்து சுனாமி' போல், இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கன மழையால், தமிழகத்தின்
தலைநகரான, சிங்கார சென்னை, சீரழிந்து விட்டது. நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டு, ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால், இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். முப்படைகளுடன், தேசிய பேரிடர் படையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.; தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, ஒரு வாரத்திற்கு முன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இடையில், மூன்று நாட்கள் மழை விட்ட நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டன. முழுமையாக மீளாத நிலையில், வங்கக்கடலில், அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலைகளால், இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், 'வானத்து சுனாமி' போல் விடாது மழை கொட்டித் தீர்க்கிறது.   ஹெலிகாப்டரில் பறந்தால்? வெள்ளம் வடிஞ்சிடுமா? கும்பிட குப்புற வெள்ளத்தில் விழுந்து, உயிர் போகும் நிலை அல்லவா ஏற்படும்? அந்தகாலத்து "சர்வாதிகார" மன்னர்களையும் விஞ்சி விடுகிறார்கள் இந்தக்காலத்து மக்கள் பிரதிநிதிகள். தேர்தல் முடிந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தாங்கள்தான் நாட்டின் மன்னர்கள் என்று நினைதுகொள்கிறார்கள்.


எப்போதும் இல்லாத வகையில், 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில், - 49; திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் - 47; சென்னையில் பரவலாக, 29 செ.மீ., மழை பெய்துள்ளது. நேற்றும் விடாது மழை கொட்டித் தீர்த்ததால், தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. >அபரிமிதமாக திறக்கப்பட்ட நீர்: சென்னைக்கு குடிநீர் தரும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் உட்பட, அனைத்து ஏரிகளிலும் இருந்து, உபரிநீர், எப்போதும் இல்லாத வகையில், அபரிமிதமாக திறந்து விடப்பட்டுள்ளதால், நிலைமை சிக்கலாகி விட்டது.அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், கொற்றலை, ஓட்டேரி நல்லா என, அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. எப்போது கரை உடைத்து ஆபத்து ஏற்படுமோ என, அஞ்சும் அளவுக்கு, படுமோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளம் மற்றும் ஏரிகளில் தண்ணீர் திறப்பால், தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர், சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை, குன்றத்துார், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை என, தென் சென்னை, மத்திய சென்னையில் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. தரைத்தளம், முதல் மாடி வரை வெள்ளம் சூழ்ந்ததால், மொட்டை மாடிகளில் ஏறி, தங்களை மீட்க யாராவது வருவரா என, லட்சக்கணக்கான மக்கள் அபய குரல் கொடுத்த வண்ணம்உள்ளனர்.r >மின்தடை, மொபைல்'அவுட்':
மீனவர்கள் உதவியுடன், பொதுநல அமைப்பினர் தங்கள் பகுதிக்குள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராணுவம் உள்ளிட்ட முப்படைகள், கடலோர காவல் படை, தீயணைப்புப் படை என, களத்தில் ஏராளமானோர் குவிந்ததாலும், உரிய இடங்களுக்கு மீட்புக்கு செல்ல முடியவில்லை. மின் தடையால், மொபைல் போன் நிறுவனங்களின் டவர்கள் செயல் இழந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், வெள்ளத்தில் சிக்கித் தவிப்போர், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். உதவி கோரி அழைப்பு வந்த பகுதிகளில் உள்ளோரை, மீட்பு படையினரும், தொடர்பு கொள்ள முடியாமல் திணறினர். ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், தகவல் தொடர்பு துண்டிப்பால், மீட்புப்பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்கின.

சென்னையில், புறநகர் ரயில் போக்குவரத்து, வெளி மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்தும் முடங்கியது. தண்ணீர் புகுந்ததால், சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னையில், அண்ணா சாலை உள்ளிட்ட, 90 சதவீத சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ்கள் இயக்கம் குறைவாக இருந்தது. தனியார் கால் டாக்சிகளின் செயல்பாடும் முடங்கி உள்ளது. பாதுகாப்பு கருதி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. >ஒன்றும் செய்ய முடியவில்லை:
விமானம், ரயில், சாலை போக்குவரத்து, தகவல் தொடர்பு என, ஒட்டுமொத்த துண்டிப்பால், சிங்கார சென்னை, தீவாக மாறி விட்டது. அரசுத் துறைகள், மீட்புப்பணிகளை முடுக்கி விட்டாலும், பெரியதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய்; குடிநீர் கேன், 75 ரூபாய் என விற்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. காய்கறிகள் வரத்து குறைந்ததோடு, அவற்றின் விலையும், மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.
மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின், 13 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின், ஆறு குழுவினர், கடலோர பாதுகாப்பு படையின், மூன்று குழுக்கள், இதுதவிர, 200 படகுகள்
ஈடுபட்டுள்ளன. இன்னும், ஏழு நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், சென்னை எப்படி இதில் இருந்து மீளும் என்பதே, தமிழக மக்கள் மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விடுமுறை:

கனமழை தொடர்வதால், சென்னையில் போக்குவரத்து, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்ல முடியாமலும், அலுவலகங்களுக்கு சென்றோர் வீடு திரும்ப முடியாமலும் சிக்கித் தவிக்கின்றனர்.'இந்த சூழலை கருத்தில் கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, தனியார் நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகள்:
*பெருங்களத்துார்
*வண்டலுார்
*தாம்பரம்
*முடிச்சூர்
*வேளச்சேரி
*துரைப்பாக்கம்
*மடிப்பாக்கம்
*பள்ளிக்கரணை
*சைதாப்பேட்டை
*கோட்டூர்புரம்
*அசோக் நகர்
*கே.கே.நகர்
*வடபழனி
*கோயம்பேடு
*வில்லிவாக்கம்
*திருவொற்றியூர்
*எண்ணுார்
*தண்டையார் பேட்டை
*அம்பத்துார்
*கொரட்டூர்
*ஆவடி
- நமது நிருபர் குழு -  dinamalar.com

கருத்துகள் இல்லை: